மிரட்டி விட்டாப்ல.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 12GB ரேம்.. 4970mAh பேட்டரி.. Google Pixel 10 அறிமுகம்!
இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. கூகுள் ஏஐ பீச்சர்களுடன் ஓஎல்இடி டிஸ்பிளே, 48 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 4970mAh பேட்டரி போன்ற பீச்சர்களில் பின்னியெடுக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதோ.
ஸ்மார்ட்போன் மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) மாடல்கள் இந்தியாவில் வெளியாகி இருக்கின்றன. இதில் கூகுள் பிக்சல் 10, கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு (Google Pixel 10 Pro Fold) ஆகிய மாடல்கள் வந்துள்ளன. இதில் பிக்சல் 10 மாடலை பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): இந்த பிக்சல் மாடலில் 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) கவர் கிளாஸ் கிடைக்கிறது.
4970mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கூகுள் டென்சார் ஜி5 (Google Tensor G5) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி கோ-சிப் கிடைக்கிறது. பிரீமியமான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
ஆகவே, இந்த பிக்சல் 10 போனில் 48 எம்பி குவாட் பிடி (Quad PD) வைடு கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 20X சூப்பர்ரெஸ் ஜூமிங் மற்றும் 5X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் + எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical + Electronic Image Stabilisation

10.5 டூயல் பிடி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஆட்டோ போகஸ் மற்றும் 95 டிகிரி அல்ட்ரா பீல்டு வியூ கிடைக்கிறது. கேமரா கோச் (Camera Coach), ஆட் மீ (Add Me), மேக்ரோ போகஸ் (Macro Focus), நைட் சைட் (Night Sight), ஆஸ்ட்ரோபோட்டோகிராபி (Astrophotography), ஆட்டோ அன்பிளர் (Auto Unblur), பேஸ் அன்பிளர் (Face Unblur) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
4K வீடியோ ரெக்கார்டிங், சினிமாடிக் பிளர், சினிமாடிக் பான் போன்ற வீடியோ பீச்சர்களும், ஆடியோ ஜூம், விண்ட் நாய்ஸ் ரெடக்சன் போன்ற ஆடியோ பீச்சர்களும் கிடைக்கின்றன. கூகுள் ஏஐ பீச்சர்களை பார்க்கையில் (Google AI), ஜெமினி நானோ, ஜெனிமி இன்-பில்ட் அசிஸ்டன்ட், மேஜிக் கியூ, கால் அசிஸ்டன்ட் போன்ற பீ்ச்சர்கள் கிடைக்கின்றன.
IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. அதோடு 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. அறிமுக சலுகைகள் போக ரூ.67,999 பட்ஜெட்டில் ப்ரீ-ஆர்டர் செய்ய முடிகிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை இன்டிகோ (Indigo), ப்ரோஸ்ட் (Frost), லெமன்கிராஸ் (Lemongrass) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி பேங்க் கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








