பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.5,000 ஆஃபரில் Pixel போன்.. 12GB ரேம்.. 48MP கேமரா.. 4970mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான பீச்சர்களுடன் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. இதில் அல்ட்ரா பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், அதிக டியூரபிலிட்டி, பில்ட்-இன் ஏஐ அசிஸ்டன்ட் மற்றும் 7 வருடங்களுக்கு அப்டேட்களை கொடுக்கும்படி கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போன் வெளியாகியது. இப்போது, பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.
மேஜிக் கியூ (Magic Cue), ஆட்டோ பெஸ்ட் டேக் (Auto Best Take), பிக்சல் ஜெர்னல் ஆப் (Pixel Journal App) மற்றும் கூகுள் டென்சார் 5 சிப்செட்டுடன் இன்டிகிரேஷன் செய்யப்பட்ட இன்-பில்ட் ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட் (Gemini AI Assistant) பீச்சர்களுடன் இந்த கூகுள் பிக்சல் 10 கிடைக்கிறது. 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. அதாவது, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.69,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
சொல்லப்போனால், இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் வெளியாகிபோது, இதே 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருந்தது. இப்போது, ரூ.5,000 நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. கூடுதலாக ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைப்பதால் மார்கெட் விலையில் இருந்து ரூ.10,000 கம்மியாக வாங்கி கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர் (HDR) சப்போர்ட் இருக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. 3என்எம் கூகுள் டென்சார் ஜி5 (3nm Google Tensor G5) சிப்செட் கிடைக்கிறது. மேலும், டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப்செட் கிடைக்கிறது. 7 வருடங்களுக்கு அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சாருடன் அல்ட்ரா வைடு கேமரா பேக் செய்யப்பட்டு உள்ளது. மேலும், சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சாருடன் 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.
இந்த டெலிபோட்டோவில் 20X சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. சினிமாடிக் பிளர் (Cinematic Blur) சப்போர்ட் உள்ளது. 10.5 எம்பி செல்பீ கிடைக்கிறது. 29W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4970mAh பேட்டரி கிடைக்கிறது. அப்சிடியன் (Obsidian), ப்ரோஸ்ட் (Frost), லென்கிராஸ் (Lemongrass), இன்டிகோ (Indigo) கலர்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








