Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. OLED டிஸ்பிளே.. 48எம்பி கேமரா.. வருகிறது புதிய கூகுள் பிக்சல் போன்.. எந்த மாடல்?

கூகுள் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி தனது கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த புதிய பிக்சல் போன் வெளியாகும். இந்நிலையில் பிக்சல் 10 போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

குறிப்பாக கூகுள் பிக்சல் 10 போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் அப்சிடியன் (Obsidian), இண்டிகோ (Indigo), ப்ரோஸ்ட் (Frost), லிமோன்செல்லோ (Limoncello)நிறங்களில் இந்த புதிய கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டே அதிர போகுது.. . வருகிறது புதிய கூகுள் பிக்சல் போன்..

கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே(OLED display) வசதியுடன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த 3என்எம் டென்சர் ஜி5 எஸ்ஒசி(Tensor G5 SoC) சிப்செட் உடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) மற்றும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 10.8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 48எம்பி கேமராவுடன் இந்த புதிய பிக்சல் 10 போன் வெளிவரும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4950mAh பேட்டரி வசதியுடன் கூகுள் பிக்சல் 10 போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 29W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. எனவே இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் வெளிவரும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த பிக்சல் 10 போன் ஆனது சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 specifications and design leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X