Home
Mobile

அடேய் சைனீஸ் Phoneஸ்.. இப்போ வாங்க.. டெலிபோட்டோ கேமரா, Tensor G5 சிப்.. Google-ன் அடுத்த Pixel போன்!

கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸ்ன் (Pixel 9 Series) கீழ் அறிமுகம் செய்ய நினைத்த எல்லா மாடல்களையும் அறிமுகம் செய்துவிட்டது. கடைசியாக அறிமுகமான பிக்சல் 9ஏ (Pixel 9a) மாடலில் சற்றே பழைய மோடம் பேக் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இதுதான் பிக்சல் 9 சீரிஸில் இருப்பதிலேயே மலிவான ஸ்மார்ட்போன் என்பதால்.. பலரும் இதை நம்பி வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சலைன் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில், ஏப்ரல் 2025 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது (சரியான விற்பனை தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை).

டெலிபோட்டோ கேமரா, Tensor G5 சிப்.. Google-ன் அடுத்த Pixel போன்!

இதற்கிடையில் பிக்சல் 10 சீரீஸ் (Pixel 10 Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு டிசைன் மாற்றம், கேமரா செட்டப்பில் அப்கிரேட், பவர்புல் ஆன சிப்செட் ஆகியவைகளுடன் வரும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. கூடவே பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்கிற விவரமும் வெளியாகி உள்ளது.

கூகுள் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கூகுள் பிக்சல் 10 சீரீஸ்-ன் கீழ் முதல் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro), கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL).

இந்த முறை, கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 10 சீரிஸின் "வடிவமைப்பை" மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கூகுள் நிறுவனம் அதன் சிக்னேச்சர் ஆஸ்தெட்டிக்கை அப்படியே வைத்திருக்கவும் முயற்சிக்கும். பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடல் ஆனது 162.7 x 76.6 x 8.5 மிமீ அளவுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது இது அதன் முன்னோடியை விட சற்று சிறியதாக இருக்கும். ஆக இது 6.8-இன்ச் டிஸ்பிளேவை தேர்வு செய்யலாம். மேலும் ப்ரோ மாடல்கள் பளபளப்பான பிரேம்களை கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் பிக்சல் 10 மாடல் ஆனது முந்தைய மாடல்களுடன் பொருந்தக்கூடிய மேட் ஃபினிஷை கொண்டிருக்கலாம்.

கடந்த ஆண்டை போலவே, பிக்சல் 10 சீரீஸ் போன்கள் ஆனதும் கூகு ளின் அடுத்த தலைமுறை டென்சர் சிப்செட்டால் (டென்சர் ஜி5 - Tensor G5) இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் சிறந்த ஏஐ அம்சங்கள் (AI Features), மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை கொண்டுவரக்கூடும்.

கேமராக்கள் - பிக்சல் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த முறை பேஸிக் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆனது வழக்கமாக டூயல் ரியர் கேமரா செட்டப்பிற்கு பதிலாக ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நடப்பது நான்-ப்ரோ மாடல்களில் முதல் முறையாகும். அதாவது ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்த பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் பிக்சல் 10 மாடலில் இடம்பெறும் என்பது போல தெரிகிறது

கூகுள் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சரியான விலை விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் முந்தைய மாடல்களை கருத்தில் கொண்டால், கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ரூ.70,000 என்கிற பட்ஜெட்டில் தொடங்கலாம். அதே நேரத்தில் ப்ரோ மாடல்கள் ரூ.1,00,000 என்கிற விலையை தாண்டலாம். கூகுள் வழக்கமாக அக்டோபர் மாதத்தில் தான் அதன் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. எனவே 2025 ஆம் ஆண்டும் அதே நேரத்தில் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Take a Poll

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் மோடம்-ஐ பொறுத்தவரை, ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் மோடம் ஆனது மற்ற பிக்சல் 9 மாடல்களில் காணப்படும் மோடத்துடன் ஒப்பிடும் போது பழைய மாடலாக உள்ளது. இதில் சாம்சங்கின் எக்ஸினோஸ் 5300 மோடம் (Samsung Exynos 5300 modem) உள்ளதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

நினைவூட்டும் வண்ணம் எக்ஸினோஸ் 5300 மோடம் என்பது கடந்த அக்டோபர் 2022 இல் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 7 சீரிஸ் (Google Pixel 7 Series) உடன் அறிமுகப்படுத்தப்பட்ட அதே மோடம் ஆகும். இது கூகுள் பிக்சல் 6 (Google Pixel 6) ஸ்மார்ட்போனின் ஷானான் ஏ5123 5ஜி (Shannon A5123 5G) மோடமின் மேம்படுத்தலாக அறிமுகமானது. இது கால் டிராப்ஸ் மற்றும் மெதுவான 5ஜி ஸ்பீட் (Call drops and slow 5G speeds.) போன்ற பொதுவான சிக்கல்களால் பாதிக்கப்பட்டதற்காக பரவலாக விமர்சிக்கப்பட்ட மோடம் ஆகும்.

இருப்பினும், எக்ஸினோஸ் 5300 மோடமில் அந்த சிக்கல்கள் காணப்படவில்லை. ஆனால் பயனர்கள் அதிக பேட்டரி நுகர்வு மற்றும் நெட்வொர்க் முறிவுகளை (high battery consumption and network breaks) எதிர் கொள்வதாக தெரிவித்தனர். அதன் பின்னர் கூகுள் அதன் லேட்டஸ்ட் பிக்சல் 9 சீரீஸ் மற்றும் எக்ஸினோஸ் 5400 (Exynos 5400) வழியாக அந்த சிக்கல்களையும் சரி செய்தது.

இதுவொரு பக்கம் இருக்க கூகுள் நிறுவனத்தின் வரவிருக்கும் டென்சர் ஜி5 சிப்செட் (Tensor G5 Chipset) ஆனது பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லும் அளவிற்கு சில முக்கிய மாற்றங்களை பெறும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான சில அறிக்கைகள், இந்த சிப்செட் ஆனது சாம்சங்கின் ஃபவுண்டரிகளில் இருந்து விலகி, டிஎஸ்எம்சியின் அட்வான்ஸ்டு 3என்எம் ப்ராஸஸிங் செயல்முறையை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவித்தன.

தற்போது வெளியாகியுள்ள ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது - கூகுள் நிறுவனம் அதன் ஜிபியு வழங்குநர்களை முழுவதுமாக மாற்றக்கூடும் என்று பரிந்துரைக்கிறது. கடந்த மாதம் ஆர்ஐஎஸ்சி-வி டே டோக்கியோ மாநாட்டில் (RISC-V Day Tokyo conference) இருந்து நீக்கப்பட்ட ஒரு ஆவணம், இமேஜினேஷன் டெக்னாலஜிஸின் ஜிபியுக்களை (Imagination Technologies' GPUs) பயன்படுத்தத் தயாராக உள்ள சிப்களில் - கூகுள் டென்சர் ஜி5 உள்ளதை வெளிப்படுத்தி இருந்தது.

இது உண்மையாகும் பட்சத்தில், கூகுள் நிறுவனம் அதன் முந்தைய டென்சர் சிப்களில் பயன்படுத்திய ஆர்ம் மாலி ஜிபியுக்களிலிருந்து விலகி செல்லும். குறிப்பிட்ட ஜிபியு ஆனது டிஎக்ஸ்டி-48-1536 (DXT-48-1536) என்று கூறப்படுகிறது, இது ரே டிரேசிங் போன்ற அம்சங்களை ஆதரிக்கும் ஒரு நவீன கிராபிக்ஸ் ப்ராசஸர் ஆக இருக்கும். நினைவூட்டும் வண்ணம், இதுபோன்ற அம்சங்கள் கூகுள் டென்சர் ஜி3 மற்றும் ஜி4 சிப்களில் உள்ள மாலி-ஜி715 இல் (Mali-G715) இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Series To Get Design Change Camera Upgrade Price Starts From Rs 70000 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X