குஷியில் Pixel பிரியர்கள்.. பிக்சல் 10 சீரிஸ் வெளியீடு நெருங்கிருச்சு.. என்னென்ன கலர்.. முழு லிஸ்ட் இதோ!
கூகுள் பிக்சல் 9 சீரிஸ் மாடல்கள் 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியாகின. அதேபோல, கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) மாடல்களும் வரும் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதிதான். ஆனால், அதிகாரப்பூர்வ தேதி உறுதி செய்யப்பட்டவில்லை. இருப்பினும், ஆகஸ்டு 20ஆம் தேதி வெளியாகும் என்றும் ஆகஸ்டு 28ஆம் தேதி ஷிப்பிங் தொடங்கும் என்றும் மார்கெட்டில் தகவல் வெளியாகிவிட்டன. இதற்கு ஏற்ப கூகுள் பிக்சல் 10 சீரிஸ் மாடல்களின் பீச்சர்களும் கசிந்துவருகின்றன.
இப்போது, ஒட்டுமொத்த மாடல்களிலும் கிடைக்க இருக்கும் கலர் வேரியண்ட்களின் விவரங்கள் கசிந்துவிட்டன. ஏற்கனவே, பிக்சல் 10 மற்றும் பிக்சல் 10 ப்ரோ போனின் முழு பீச்சர்களும் வெளியாகின. ஆனால், கலர் வேரியண்ட்கள் மட்டும் வெளியாகவில்லை. இப்போது, அந்த விவரங்களுடன் ஒட்டுமொத்த மாடல்களின் கலர் விவரங்களும் கசிந்துவிட்டன.

இது அதிகாரப்பூர்வமாவை கிடையாது. ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ், ஆர்சேன் லூபின் (எக்ஸ் தள பதிவு) மற்றும் மிஸ்டிக் லீக்ஸ் (Mystic Leaks) ஆகியவை மூலமாக கசிந்த விவரங்களாகும். அடுத்த சில வாரங்களில் கூகுள் நிறுவனமே இதை அதிகார்ப்பூர்வமாக வெளியிட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக இந்த கசிந்து கலர் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். எந்தெந்த மாடல்கள் வர இருக்கின்றன.
கூகுள் பிக்சல் 10 சீரிஸ் மாடல்களில் கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro), கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு (Google Pixel 10 Pro Fold) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் பிக்சல் 10 மாடலில் வழக்கமாக கிடைக்கும் 4 என்னும் எண்ணிக்கையில் கலர் வேரியண்ட்கள் இருக்கின்றன.
அதில் அப்சிடியன் (Obsidian), ஃப்ரோஸ்ட் (Frost), லெமன்கிராஸ் (Lemongrass) மற்றும் இண்டிகோ (Indigo) இருக்கிறது. பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் ப்ரோ எக்ஸ்எல் மாடல்களில் ஒரே மாதிரியான கலர் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. இதிலும் 4 ஆப்ஷன் இருக்கின்றன. ஆனால், முந்தைய மாடலைவிட சில வேறு கலர்களை இதில் பார்க்க முடிகிறது.

இவற்றில் அப்சிடியன் (Obsidian), போர்ஸ்லைன் (Porcelain), மூன்ஸ்டோன் (Moonstone) மற்றும் ஜேட் (Jade) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இறுதியாக கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு மாடலில் மூன்ஸ்டோன் மற்றும் ஜேட் ஆகிய 2 கலர்கள் மட்டும் கிடைக்க இருக்கின்றன. இந்த கலர் விவரங்கள் லேட்டஸ்ட் தகவல்களாகும். ஆர்சேன் லூபினின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டவை.
இதற்கு முன்னதாக ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் தளத்திலும் வெளியாகியது. இதற்கும் அதற்கும் மாறுபாடுகள் உள்ளன. இந்த ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) அடிப்படையில், பிக்சல் 10 மாடலில் அல்ட்ரா ப்ளூ (Ultra Blue), லிமோன்செல்லோ (Limoncello), ஐரிஸ் (Iris) மற்றும் மிட்நைட் (Midnight) ஆகிய 4 கலர்கள் கிடைக்க இருக்கின்றன.

பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் ப்ரோ எக்ஸ்எல் மாடல்களில் ஸ்டெர்லிங் கிரே (Sterling Gray), லைட் போர்ஸ்லைன் (Light Porcelain), மிட்நைட் (Midnight) மற்றும் ஸ்மோக்கி கிரீன் (Smoky Green) ஆகிய கலர்கள் வர இருக்கின்றன. அதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு போனில் ஸ்டெர்லிங் கிரே மற்றும் ஸ்மோக்கி கிரீன் கலர்கள் வருகின்றன. இதில் எது உறுதி என்பது அடுத்த மாதம் தெரியும்.
Image Credit: Android Headlines


Click it and Unblock the Notifications








