Home
Mobile

கூகுள் பிக்சல் 10 ப்ரோ XL போன் அறிமுகம்.. 50MP கேமரா.. 5200mAh பேட்டரி.. IP68 ரேட்டிங்.. என்ன விலை?

கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் அம்சங்கள் (Google Pixel 10 Pro XL Specifications): 6.8-இன்ச் QHD+ அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1344 x 2992 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ XL போன் அறிமுகம்.. என்ன விலை?

கூகுள் டென்சர் ஜி5 3என்ம் பிராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் உடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோஎக்ஸ்எல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சாம்சங் ஜிஎன்வி மெயின் சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். மேலும் மேக்ரோ ஆப்ஷன், 8கே வீடியோ பதிவு ஆதரவு, 10 பிட் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பல சிறப்பான கேமரா அம்சங்கள் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 42எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. பின்பு இந்த செல்பி கேமரா மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டெம்ப்ரேச்சர் சென்சார் ஆதரவு கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போன். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 6 எல்இ, ஜிபிஎஸ், என்எப்சி, கலிலியோ, யுஎஸ்பி யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ XL போன் அறிமுகம்.. என்ன விலை?

5200எம்ஏஎச் பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 29W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15W Qi2 பிக்சல்ஸ்னாப் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. அப்சிடியன் (Obsidian), மூன்ஸ்டோன் (Moonstone) மற்றும் ஜேட் (Jade) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

256ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போனின் விலை ரூ.1,24,999-ஆகும். பின்பு இதன் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.1,39,999 ஆகும். குறிப்பாக இந்த புதிய போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Pro XL with 5200mAh battery launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X