Home
Mobile

இது வேற மாதிரி.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 5200mAh பேட்டரி.. 39W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓஎல்இடி டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50 எம்பி மெயின் கேமரா, 39W ஃபாஸ்ட் சார்ஜிங், 5200mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) போன் வெளியாக இருக்கிறது. இந்த போனின் முழு பீச்சர்களும் இப்போது கசிந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதால், இப்படி பீச்சர்கள் கசிவது தெரிகிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போனின் பீச்சர்கள், வெளியீட்டு விவரங்கள் இதோ.

கூகுள் பிக்சல் 9 சீரிஸ் மாடல்களை போலவே இந்த 10 சீரிஸ் மாடல்களும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏற்ப அந்த மாடல்களின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிய தொடங்கின. ஆனால், இப்போது, கேமரா, பேட்டரி, சிப்செட், டிஸ்பிளே போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் கசிந்துவிட்டன. இந்த பீச்சர்களை பார்ப்போம்.

இது வேற மாதிரி! 16GB ரேம்.. 50MP கேமரா.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?

கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் அம்சங்கள் (Google Pixel 10 Pro XL Specifications): இந்த பிக்சல் போன் அல்ட்ரா பிரீமியம் மாடலாக வெளியாக இருப்பதால், கேமராவில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. ஓஐஎஸ் (OIS) மற்றும் எல்டிஏஎப் (LDAF) ஆட்டோபோகஸ் மட்டுமல்லாமல், சாம்சங் ஜிஎன்வி (Samsung GNV) சென்சாருடன் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்858 (SONY IMX858) சென்சார் மற்றும் மேக்ரோ ஆப்ஷனுடன் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதுபோக ஓஐஎஸ், 5X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் கொண்ட 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போனில் 42 எம்பி செல்பீ ஷூட்டர் (4K வீடியோ ரெக்கார்டிங்) கிடைக்கிறது.

ஆகவே, கேமராவில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதேபோல டிஸ்பிளேவும் பட்டையை கிளப்புகிறது. அதாவது, கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கொண்ட 6.8 இன்ச் (2992 x 1344 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக புரொடெக்சன் உள்ளது.

ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட 3என்எம் கூகுள் டென்சார் ஜி5 (3nm Google Tensor G5) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக எதிர்பார்க்க முடிகிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் போனில் 5200mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 39W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.

மேற்கண்ட பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாவில்லை. மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மட்டுமே. ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய மாடல்களை போலவே வெளியான அதே தேதியில் ப்ரீ-ஆர்டர் தொடங்க வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக பீச்சர்கள் உறுதி செய்யப்பட இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Pro XL Full Specifications Leaked Ahead of August Launch Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X