இதுதான் புதிய கூகுள் போன்.. 5200mAh பேட்டரி.. IP68 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும். இந்நிலையில் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன். மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் அம்சங்கள் ( Google Pixel 10 Pro XL Specifications): 6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.
கூகுள் டென்சர் ஜி5 சிப்செட்(Tensor G5 Chipset) உடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 5எக்ஸ் ஜூம் (5x zoom) ஆதரவும் இந்த கூகுள் போனில் உள்ளது. இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 48எம்பி கேமராவும் இதில் உள்ளது.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த புதிய கூகுள் பிக்சல் போன் வெளிவரும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Dust & Water Resistant)வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
5200mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் அறிமுகம் செய்யப்படும். பின்பு 39W வயர்டு சார்ஜ் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








