Home
Mobile

Google Pixel 10 Pro அறிமுகம்.. 50MP கேமரா.. 4870mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 29W சார்ஜிங்.. விலை எப்படி?

இந்திய மார்கெட்டில் 50 எம்பி கேமரா, 4870mAh பேட்டரி, ஓஎல்இடி டிஸ்பிளே, 29W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) வெளியாகி இருக்கிறது. கூகுள் டென்சார் ஜி5 சிப்செட் கொண்ட இந்த பிக்சல் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அட்வான்ஸ்டு ஏஐ பீச்சர்கள், ஹை-குவாலிட்டி போட்டோஸ் மற்றும் வீடியோஸ் கொடுக்கும் கேமரா சிஸ்டம் மற்றும் நெக்ஸ்ட்-ஜென் சிப்செட் மட்டுமல்லாமல், 7 ஜெனரேஷன் ஓஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களுடன் இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ வெளியாகி இருக்கிறது. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது.

Google Pixel 10 Pro அறிமுகம்.. 50MP கேமரா.. 4870mAh பேட்டரி.. விலை?

கூகுள் பிக்சல் 10 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 10 Pro Specifications):
6.3 இன்ச் (1280 x 2856 பிக்சல்கள்) எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 495 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 3,300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த சூப்பர் அக்ட்வா டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கிடைக்கிறது.

30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4870mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 15W கியூ2 வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி கோ-ப்ராசஸருடன் கூகுள் டென்சார் ஜி5 (Google Tensor G5) கிடைக்கிறது. இந்த ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி ஆக்டா பிடி வைடு கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் ஆட்டோ போகஸ் மற்றும் மேக்ரோ போகஸ் உள்ளது.

Google Pixel 10 Pro அறிமுகம்.. 50MP கேமரா.. 4870mAh பேட்டரி.. விலை?

அதேபோல டெலிபோட்டோவில் 5X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 100X ப்ரோ ரெஸ் ஜூமிங் கிடைக்கிறது. மல்டி-சோன் எல்சிஏஎப் போகஸ் மற்றும் ஓஐஎஸ் + ஈஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 42 எம்பி டூயல் பிடி செல்பீ கேமரா கிடைக்கிறது. ப்ரோ கன்ட்ரோல் (Pro controls), கேமரா கோச், ஆட் மீ, ஹை-ரெஸ் போர்ட்ராய்டு மோட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

கூகுள் ஏஐ பீச்சர்கள் (Google AI Features):
ஜெனிமி நானோ, இன்-பில்ட் ஜெனிமி ஏஐ அசிஸ்டன்ட், ஜெமினி லைவ், ஜெமினி ஆப் போன்ற வழக்கமான பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிக்சல் ஸ்கிரீன்ஷாட்கள் (Pixel Screenshots), மேஜிக் கியூ (Magic Cue), லைவ் டிரான்ஸ்லேட் (Live Translate), கால் அசிஸ்ட் (Call Assist) மற்றும் சர்கிள் டூ சர்ச் (Circle to Search) பீச்சர்கள் கிடைக்கின்றன.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ விலை (Google Pixel 10 Pro Price):
இந்த பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ,1,09,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதில் மூன்ஸ்டோன் (Moonstone), ஜேட் (Jade), போர்ஸ்லைன் (Porcelain) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்கள் இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Pro With 50MP Camera Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X