சார் சூப்பர்.. 16GB ரேம், Tensor G5 சிப், 5200mAh பேட்டரி.. உண்மையாவே இது Google Pixel போன் தானா!
2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் - ஐபோன் 17 சீரிஸ் (Apple iPhone 17 Series) மாடல்களும், நம்பர் 2 இடத்தில் - கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) ஸ்மார்ட்போன்களும் உள்ளன. இப்போது வெளியாகியுள்ள சில சமீபத்திய தகவல்கள் பிக்சல் 10 சீரீஸை நம்பர் 1 இடத்திற்கு நகர்த்தும் அளவிற்கு சுவாரஸ்யமானவைகளாக உள்ளன.
ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக, இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள பிக்சல் 10 சீரீஸின் 2 டாப்-எண்ட் ஃபிளாக்ஷிப் மாடல்கள் (Top-end Flagship Models) ஆன பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro) மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள் (டிஸ்பிளே, சிப், கேமரா, ரேம், ஸ்டோரேஜ், பேட்டரி குறித்த விவரங்கள்) லீக் ஆகியுள்ளது; அவைகள் எல்லாமே எதிர்பார்ப்பை எகிறவைக்கும்படி உள்ளன!

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடல்கள் முறையே 6.3 இன்ச் மற்றும் 6.8 இன்ச் டிஸ்பிளேக்களை பெறலாம். இந்த டிஸ்பிளேக்கள் 1 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ( 1 to 120Hz Refresh Rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 Nits Peak Brightness) மற்றும் எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் (LTPO Technology) வரும். மேலும் இந்த டிஸ்பிளேக்கள் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் (Gorilla Glass Victus 2 protection) வழங்கக்கூடும்.
பிக்சல் 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இரண்டுமே 16 ஜிபி ரேம் (16GB RAM) கொண்ட டென்சர் ஜி5 சிப்செட் (Tensor G5 Chipset) மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை பிக்சல் 10 ப்ரோ மாடலில் 128ஜிபி தொடங்கி 1 டிபி வரை ஆப்ஷன்கள் இருக்கலாம். ஆனால் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் பேஸிக் வேரியண்ட் 256ஜிபி ஆக இருக்கும், இதுவும் 1டிபி வரை செல்லலாம்.
கேமராக்களை பொறுத்தவரை பிக்சல் 10 ப்ரோ மற்றும் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய 2 மாடல்களுமே 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (50-megapixel main camera), 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் (48-megapixel ultra-wide shooter) மற்றும் 48 மெகாபிக்சல் 5எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ் (48-megapixel 5x telephoto lens) ஆகியவற்றை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தல் 42 மெகாபிக்சல் செல்பீ கேமரா (42-megapixel selfie camera) இடம்பெறலாம்
மேலும் இந்த ஆண்டு அறிமுகமாகும் பிக்சல் 10 ப்ரோ மாடல்களில் இடம்பெறும் பெரிய மாற்றம் ஆக டெலி-மேக்ரோ திறன்கள் (Tele-macro capabilities) இருக்கும். இது பயனர்கள் டெலிஃபோட்டோ லென்ஸை (Telephoto Lens) பயன்படுத்தி மேக்ரோ புகைப்படங்களை (Macro Photos) பிடிக்க அனுமதிக்கும்; மேலும் அல்ட்ராவைட் கேமராவை (Ultra-wide Camera) பயன்படுத்தியும் இதை செய்ய அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 10 ப்ரோ மாடலில் 4870mAh பேட்டரிஇடம்பெறலாம். ஒப்பீட்டளவில் இது பிக்சல் 9 ப்ரோ மாடலில் உள்ள 4,700mAh பேட்டரியை விட சற்றே பெரியதாகும். இதேபோல பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் 5,200mAh பேட்டரி பேக் செய்யப்படலாம்.
5,200mAh பேட்டரி என்பது பிக்சல் போன்களில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பேட்டரி அளவாக இருக்கக்கூடும் என்று ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ்-ன் அறிக்கை கூறுகிறது. மேலும் கூகுள் நிறுவனம் பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய இரண்டு மாடல்களின் பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) திறனையும் அதிகரிக்கக்கூடும்.


Click it and Unblock the Notifications








