பொளந்து கட்டப் போகுது.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 4870mAh பேட்டரி.. 29W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) மாடல்களுக்கு காத்து கொண்டிருக்கிறது. இப்போது, கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. 50 எம்பி மெயின் கேமராவில் தொடங்கி 16 ஜிபி ரேம் வரையில் பல்வேறு அப்கிரேட்களை பார்க்க முடிகிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ போனின் கசிந்த பீச்சர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது அதிகாரப்பூர்வமானவை அல்ல. ஆனால், இடம்பெறலாம்.
கூகுள் பிக்சல் 10 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 10 Pro Specifications): இந்த பிக்சல் மாடலில் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொண்ட கூகுள் டென்சர் ஜி5 3என்எம் (Google Tensor G5 3nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. சொல்லப்போனால், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்ட முதல் மாடல்களாக பிக்சல் 10 சீரிஸ் இருக்க வாய்ப்புள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட 6.3 இன்ச் (2856 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வர இருக்கிறது. இந்த எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வர இருக்கிறது. இந்த பிக்சல் மாடலில் 16 ஜிபி ரேம் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, 16 ரேம் + 128 ஜிபி மெமரி, 16 ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. மேலும், 16 ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடலும் வர இருக்கிறது. இந்த பிக்சல் 10 ப்ரோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. 42 எம்பி செல்பீ ஷூட்டர் வர இருக்கிறது.
மெயின் கேமராவில் சாம்சங் ஜிஎன்வி (Samsung GNV) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் எல்டிஏஎப் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல அல்ட்ரா வைடு கேமரா மற்றும் டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சார் கிடைக்கிறது. இதில் டெலிபோட்டோவில் 5X ஆப்டிகல் ஜூமிங், 30X டிஜிட்டல் ஜூமிங் உள்ளது.

மேலும், எச்டிஆர் ஷூட், சினிமாடிக் பிளர் போன்ற பிரீமியம் கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. செல்பீ ஷூட்டரிலும் அதே சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சார் கிடைக்க இருக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ போனில் 4,870mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 29W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. கியூஐ2 வயர்லெஸ் சார்ஜிங் (Qi2 Wireless Charging) வருகிறது.
அல்ட்ராசோனிக் ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் டெம்ப்ரேச்சர் சென்சார் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP68 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த போனானது, ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், கடந்தாண்டு இதே மாதத்தில் கூகுள் பிக்சல் 9 சிரீஸ் வெளியாகியது.


Click it and Unblock the Notifications








