Pixel ஒரே போடு.. முழுசா ரூ.10,000 டிஸ்கவுண்ட்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5015mAh பேட்டரி.. எந்த மாடல்?
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 10 ப்ரோ போல்டு (Pixel 10 Pro Fold) ஸ்மார்ட்போனின் விற்பனை குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் தொடங்கிவிட்டது. ஆரம்பமே ரூ.10,000 டிஸ்கவுண்ட், ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ போன்ற சலுகைகளுடன் இருக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 5015mAh பேட்டரி, IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு மாடலின் முழு விவரங்கள் இதோ.
பிக்சல் மாடல்களிலேயே டாப்-எண்ட் மாடலாக இந்த பிக்சல் 10 ப்ரோ போல்டு இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.1,72,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.10,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

மேலும், ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. அதேபோல 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது. இதுபோக ரூ.23,400 மதிப்புள்ள 1 வருடத்துக்கான கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. கிரே ஷேட் கொடுக்கும்படி மூன்ஸ்டோன் (Moonstone) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. கூகுள் இந்திய ஆன்லைன் ஸ்டோரில் வாங்கலாம்.
கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு அம்சங்கள் (Google Pixel 10 Pro Fold Specifications): இந்த போல்டு ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் பிக்சல் டிராப் அப்டேட்களை கொடுக்கிறது. பிரீமியமான கூகுள் டென்சார் ஜி5 (Google Tensor G5) ப்ராசஸர் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது.
8 இன்ச் (2076 x 2152 பிக்சல்) சூப்பர் ஆக்டுவா ஃப்ளெக்ஸ் (Super Actua Flex) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த மெயின் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 373 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் சப்போர்ட் கிடைக்கிறது. அல்ட்ரா தின் கிளாஸ் (Ultra Thin Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. 6.4 இன்ச் (1080 x 2364) கவர் டிஸ்பிளே உள்ளது.
இந்த ஓஎல்இடி ஆக்டுவா டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது. 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. இதுபோக ஃபிங்கர்பிரிண்ட்-ரெசிஸ்டன்ட் கோட்டிங் மற்றும் மொத்தமாக IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மல்டி அலாய் ஸ்டீல் ஃபிரேம் பாடி உள்ளது.
இதில் ஏரோஸ்பேஸ் கிரேடு ஹின்ஞ் அலுமினியம் அலாய் கிடைக்கிறது. ஜெமினி நானோ, ஜெமினி அசிஸ்டன்ட், ஜெமினி லைவ், ஜெமினி ஆப்ஸ் மட்டுமல்லாமல், மேஜிக் கியூ, லைவ் டிரானஸ்லேட் உள்ளிட்ட கூகுள் ஏஐ (Google AI) பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல கேமராவில் ஆட் மீ, ஆட்டோ அன்பிளர் மற்றும் ஆட்டோ பெஸ்ட் டேக் உள்ளிட்ட ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன.
48 எம்பி மெயின் கேமரா + 10.5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா + 10 எம்பி செல்பீ கேமரா உள்ளது. சாம்சங் சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி, 20X சூப்பர் ரெஸ் ஜூம், 4K வீடியோ ரெக்கார்டிங் போன்ற டாப்-லெவல் கேமரா பீச்சர்கள் உள்ளன. இந்த பிக்சல் போல்டு போனில் 5,015mAh பேட்டரி, 23W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.


Click it and Unblock the Notifications








