Home
Mobile

அதிரவைக்கும் விலை.. IP68 ரேட்டிங்.. OLED டிஸ்பிளே.. அறிமுகமானது புது கூகுள் பிக்சல் போன்.. எந்த மாடல்?

கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 10 Pro Fold) போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, 48எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் அம்சங்கள் (Google Pixel 10 Pro Fold Specifications): 8-இன்ச் QHD+ சூப்பர் ஆக்சுவா ஃப்ளெக்ஸ் (Super Actua Flex) ஒஎல்இடி எல்டிபிஒ டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், அல்ட்ரா தின் ப்ரொடெக்ஷன் கிளாஸ் (Ultra Thin Glass protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதிரவைக்கும் விலை.. அறிமுகமானது புது கூகுள் பிக்சல் போன்.. எந்த மாடல்?

அதேபோல் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஆக்சுவா ஒஎல்இடி கவர் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

கூகுள் டென்சர் ஜி5 பிராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் உடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 48எம்பி சாம்சங் ஜிஎன்8 மெயின் சென்சார் + 10.5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10.8எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதில் மேக்ரோ ஆப்ஷன், 4கே வீடியோ பதிவு ஆதரவு, 10 பிட் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பல சிறப்பான கேமரா அம்சங்கள் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 6 எல்இ, ஜிபிஎஸ், என்எப்சி, கலிலியோ. யுஎஸ்பி டைப-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

அதிரவைக்கும் விலை.. அறிமுகமானது புது கூகுள் பிக்சல் போன்.. எந்த மாடல்?

5015mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 23W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15W Qi2 பிக்சல்ஸ்னாப் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. மூன்ஸ்டோன் (Moonstone) மற்றும் ஜேட் (Jade) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

256ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போனின் விலை ரூ.1,72,999-ஆகும். ஆனால் இந்த போனின் விற்பனை விவரங்கள் வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Pro Fold launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X