குறையுது iPhone மோகம்.. எகிறுது Pixel பிரபலம்.. 48MP கேம், 16GB ரேம், Tensor G5 சிப் உடன் Google-ன் புது போன்!
ஆப்பிள் ஐபோன்கள் மீதான 'க்ரேஸ்' (மோகம்) குறைந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. மாறாக மக்கள் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கூறலாம். கடைசியாக அறிமுகமான பிக்சல் 9 சீரீஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகமான பிக்சல் 9ஏ - வரவேற்பை பெற்றன.
இந்த வரவேற்பு - பிக்சல் 10 சீரீஸ் மீது இன்னும் அதிகமாக என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிக்சல் 10 சீரிஸில் இடம்பெறும் போல்ட் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கலாம். ஏனென்றால் பிக்சல் 9 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்ட சலசலப்புகள் அப்படி! பிக்சல் 10 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? இதன்கீழ் என்னென்ன மாடல்கள் வரும்? பிக்சல் 10 ப்ரோ போல்ட் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

பிக்சல் 10 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? கூகுள் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் (2025 ஆகஸ்ட் மாதத்தில்) பிக்சல் 10 சீரீஸை சந்தைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பிக்சல் 9 சீரிஸை போலவே, வரவிருக்கும் பிக்சல் 10 சீரிஸிலும் 4 மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 10 ப்ரோ போல்ட்.
சமீபத்தில் ஆன்லைனில் லீக் ஆன பிக்சல் 10 ப்ரோ ஃபோல் ஸ்மார்ட்போனின் ரெண்டர்களின் (பிக்சல் 9 ப்ரோ போல்ட் ஆக இருக்க்கலாம் என்று கூறப்படும் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களின்) வழியாக, கூகுள் நிறுவனத்தின் அடுத்த போல்டபிள் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்கிற விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
டிப்ஸ்டர் ஒன்லீக்ஸ் உடன் இணைந்து ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிட்டுள்ள ரெண்டர்களின்படி, பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது கிரீம் கலர் ஆப்ஷனில் ஒரு பழக்கமான டிசைன் லேங்குவேஜை சித்தரிக்கின்றன. இது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் நாம் கண்டதை போலவே செவ்வக கேமரா யூனிட்டை இடம்பெறும் என்பது போல் தெரிகிறது
மேலும் கேமரா லென்ஸ்கள் டூயல்-ஸ்டேஜ் வடிவமைப்பில் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டின் 48 மெகாபிக்சல் ரியர் கேமரா யூனிட்டை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் அவுட்டர் டிஸ்ப்ளேவில் ஒரு ஹோல் பஞ்ச் கட்அவுட் இருப்பது போல் தெரிகிறது. டிஸ்பிளேவில் உள்ள பெசல்கள் தடிமனாகவும் தெரிகிறது.இன்னர் ஸ்க்ரீனில் வலது மூலையிலும் ஒரு ஹோல் பஞ்ச் கட்அவுட் உள்ளது. ஆக பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டை விட சற்று தடிமனாக இருக்கலாம் என்பது போல் தெரிகிறது
பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் டென்சர் ஜி5 சிப் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மீடியாடெக் டி900 மோடம்-ஐ கொண்டிருக்கலாம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டு இயங்கக்கூடும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய கீல் வடிவமைப்புடன் போல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற ஆய்வாளர் மிங்-சி குவோவின் கூற்றுப்படி, ஆப்பிள் அதன் மடிக்கக்கூடிய ஐபோனின் கீல் பொறிமுறைக்கு திரவ உலோக தொழில்நுட்பத்தை (Liquid metal technology) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
சீன உற்பத்தியாளரான டோங்குவான் இயோன்டெக் நிறுவனத்திடமிருந்து ஒரு யூனிட்டுக்கு $9 முதல் $14 வரை என்கிற விலைக்கு பெறப்பட்ட லிக்விட் மெட்டல் கீல் ஆனது வழக்கமான கீல் வடிவமைப்புகளை விட 2 முக்கிய நன்மைகளை உறுதியளிக்கிறது. ஒன்று - நீண்ட தயாரிப்பு ஆயுட்காலத்திற்கான (Longer product lifespan) மேம்பட்ட டூயுரபலிட்டி (Durability). இரண்டு - விசிபிள் கிரீஸ்-ஐ (visible crease) குறைக்க மேம்படுத்தப்பட்ட ஸ்க்ரீன் பிளாட்னஸ் (Improved screen flatness). மேலும் ஆப்பிளின் போல்டபிள் ஐபோன் ஆனது சாம்சங்கின் போல்டபிள் மாடல்களை விட குறைந்தது 20% அதிக விலை நிர்ணயத்தை பெறவும் வாய்ப்புள்ளது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








