மொத்த இந்தியாவும் இந்த Google போனுக்கு வெயிட்டிங்.. IP68 ரேட்டிங்.. 1டிபி மெமரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
கூகுள் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்களை வெளியிட உள்ளது. குறிப்பாக உலகளாவிய மற்றும் இந்திய வெளியீடுகள் இரண்டும் ஒரே நாளில் நடைபெறுகின்றன. குறிப்பாக இந்த நிகழ்வில் கூகுள் நிறுவனம் நான்கு மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது கூகுள் பிக்சல் 10 (Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) என்கிற நான்கு மாடல்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்ட் மாடலின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் அம்சங்கள் (Google Pixel 10 Pro Fold Specifications): 8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 6.4-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
கூகுள் டென்சர் ஜி5 சிப் (Google's Tensor G5 chip) உடன் இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 16 (Android 16)இயங்குதள வசதியுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்ட் போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி மெயின் சென்சார் (Samsung GN8) + 10.5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10.8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும். எனவே இதன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
5015mAh பேட்டரி வசதியுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் மாடல் அறிமுகாகும். எனவே இந்த போனை அடிக்கடி சார்ஜ் செய்ய அவசியம் இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 23W வயர்டு சார்ஜிங் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட் ஆதரவுகள் கூகுள் பிக்சல் போனில் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.1,79,999 விலையில் இந்த புதிய கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 போனை விட மேம்பட்ட அம்சங்கள் இந்த பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








