அதிரவிடும் விலை.. ஆக.20-ல் வரும் புதிய கூகுள் போன்.. 8 இன்ச் டிஸ்பிளே.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 10 Pro Fold) போனை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய பிக்சல் போன் அசத்தலான வடிவமைப்பு, மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் அம்சங்கள் (Google Pixel 10 Pro Fold Specifications): தரமான கூகுள் டென்சர் ஜி5 சிப் (Google's Tensor G5 chip) உடன் இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 6.4-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்ட் போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
48எம்பி மெயின் சென்சார் (Samsung GN8) + 10.5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10.8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும். எனவே இதன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
அதுவும் 5015mAh பேட்டரி வசதியுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் மாடல் அறிமுகாகும். எனவே இந்த போனை அடிக்கடி சார்ஜ் செய்ய அவசியம் இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 23W வயர்டு சார்ஜிங் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட் ஆதரவுகள் கூகுள் பிக்சல் போனில் உள்ளது. மேலும் ஜெமினி நானோ ( Gemini Nano), ஜெமினி லைவ், சர்க்கிள் டு சர்ச், கால் அசிஸ்ட் மற்றும் பல AI அம்சங்களையும் கொண்டிருக்கும்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மூன்று மைக்ரோபோன்கள் ஆதரவுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.1,79,999 விலையில் இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Photo Credit: Google


Click it and Unblock the Notifications








