மொத்த மார்கெட் அதிருது.. OLED டிஸ்பிளே.. 5015mAh பேட்டரி.. 50MP கேமரா.. கூகுளின் புது Fold போன்.. எந்த மாடல்?
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 10 ப்ரோ போல்டு (Pixel 10 Pro Fold) போனின் டிசைன் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி ஒட்டுமொத்த மார்கெட்டையும் அதிர வைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 7 (Samsung Galaxy Z Fold 7) மாடலுக்கு நிகரான டிசைன் கிடைக்கிறது. இந்த பிக்சல் 10 ப்ரோ போல்டு போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்துவிட்டன. இந்திய வெளியீடு மற்றும் விற்பனை விவரங்கள் உறுதியாகிவிட்டன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட மேட் பை கூகுள் (Made by Google) ஈவென்ட் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கிறது. அமெரிக்காவில் நடக்கும் இந்த ஈவெண்ட்டில் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு மாடல் மட்டுமல்லாமல், மேலும் 3 பிக்சல் 10 சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதனால், ஒட்டுமொத்த கவனமும் மேட் பை கூகுள் ஈவெண்ட் மீது இருக்கிறது.

இப்போது, பிக்சல் 10 ப்ரோ போல்டு போனின் டிசைன் விவரங்கள் டீசர் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே, மார்கெட்டில் கசிந்த டிசைனில் அப்படியே இருக்கிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்க முடிகிறது. சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 7 மாடலுக்கு சரியான போட்டி மற்றும் ஆப்ஷன் மாடலாக இது இருப்பது தெரிகிறது. பீச்சர்கள், விலை எப்படி?
கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு அம்சங்கள் (Google Pixel 10 Pro Fold Specifications): டிசைன் விவரங்களை போலவே முன்கூட்டியே பீச்சர்களும் கசிந்துவிட்டன. இது அதிகாரப்பூர்வமானவை கிடையாது. இந்த போல்டு மாடலில் 8 இன்ச் ஓஎல்இடி (OLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
6.4 இன்ச் ஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் ( FHD+) ரெசொலூஷன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கிடைக்க இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்க இருக்கிறது.

மேலும், 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் கிடைக்க இருக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் கூகுள் டென்சார் ஜி5 (Google Tensor G5) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 10.5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
மெயின் கேமராவில் சாம்சங் ஜேஎன் 8 சென்சார், அல்ட்ரா-வைடு கேமராவில் சாம்சங் 3ஜே1 சென்சார் மற்றும் டெலிபோட்டோவில் சாம்சங் 3ஜே1 சென்சார் கிடைக்கிறது. சாம்சங் 3கே1 சென்சாருடன் 10.5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு போனில் 5,015mAh பேட்டரி மற்றும் 23W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே தேதியில் இந்தியாவிலும் இந்த போல்டு போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 10 சீரிஸ் கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த போல்டு மாடலையும் எதிர்பார்க்கலாம். இதன் ஆரம்ப விலை ரூ.1,72,000ஆக இருக்கும் என்று மார்கெட்டில் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications








