மொத்த மார்கெட் மிரளுது.. ஆக.21-க்கு அப்புறம் இதுதான்.. பிளிப்கார்ட்ல வருது புது Pixel போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களும் அறக்க பறக்கும்படி கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) போனின் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இந்த பிக்சல் 10 மட்டுமல்லாமல், ப்ரோ, ப்ரோ எக்ஸ்எல் மற்றும் ப்ரோ போல்டு போன்ற பல்வேறு மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இந்த கூகுள் பிக்சல் 10 போன் குறித்த விவரங்கள் இதோ.
ஸ்மார்ட்போன் மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட கூகுள் நிறுவனத்தின் மேட் பை கூகுள் (Made by Google) ஈவென்ட்டானது வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் இந்த இவென்ட்டை இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு முதல் யூடியூபில் பார்த்து கொள்ளலாம். இதில் பல்வேறு ப்ராடெக்ட்கள் வெளியாகின்றன.

ஆகவே, கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) மாடல்கள் மட்டுமல்லாமல், கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 10 போல்டு (Google Pixel 10 Pro Fold) போன்ற அல்ட்ரா பிரீமியம் மாடல்களும் வெளியாக இருக்கின்றன. இதனால், அந்த மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் ஏற்கனவே கசிந்துவிட்டன.
இதில், கூகுள் பிக்சல் 10 போனின் இந்திய விற்பனை மற்றும் ப்ரீ-ஆர்டர் தேதி விவரங்கள் அதிகாரப்பூர்வமாகவே உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் இங்கு ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த விவரங்கள் பிளிர்கார்ட்டின் மைக்ரோசைட் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கூகுள் பிக்சல் 10 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.69,974ஆக இருக்க வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்கா டாலர்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விலையாகும். ஆகவே, இந்தியாவில் மாறுபட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதியில் தெரியவரும். என்னென்ன பீச்சர்கள் வருகிறது?
கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமானவை கிடையாது. மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மட்டுமே. இருப்பினும், நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளதால், இந்த பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ஆகவே, இதில் கூகுள் டென்சாட் ஜி5 3என்எம் (Google Tensor G5 3nm) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் வருகிறது.
மிட்-பிரீமியம் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. ப்ரீமியம் கேமரா செட்டப் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா வர இருக்கிறது. 10.5 எம்பி செல்பீ கேமராவை கொடுக்க இருக்கிறது. சாம்சங் மற்றும் சோனி சென்சார் வருகின்றன. இந்த கூகுள் பிக்சல் போனில் 4,970mAh பேட்டரி, 29W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








