Home
Mobile

Google-ன் இருங்க பாய் மொமெண்ட்.. அதே விலை.. 1 வருஷம் FREE ஆபர்.. Pixel 10 சீரிஸ் பிச்சிக்குமே!

இருங்க பாய்.. ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரட்டும் என்று கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். காரணம் - கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) ஸ்மார்ட்போன்களை, வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் அறிமுகப்படுத்த உள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக, பிக்சல் 10 சீரிஸின் இந்திய சந்தைக்கான விலை நிர்ணயம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு ஆகிய 4 மாடல்களுமே, கடந்த ஆண்டு வெளியான பிக்சல் 9 சீரீஸ் மாடல்களுடன் ஒப்பிடும்போது விலை உயர்வை பெறாது!

Google-ன் இருங்க பாய் மொமெண்ட்.. அதே விலை.. 1 வருஷம் FREE ஆபர்!

மேலும், இந்த முறை பிக்சல் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை "சூடுபிடிக்க வைக்க" வரவிருக்கும் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு சில வங்கி சலுகைகளையும், இலவச சந்தாக்களையும் கூகுள் நிறுவனம் வழங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது பிக்சல் 10 சீரீஸ் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அறிமுக சலுகைகளின் கீழ் வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸின் (லீக் ஆன) விலை விவரங்கள்: ஸ்மார்ட்பிரிக்ஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆடு சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகமாகும், இதன் விலை ரூ.79,990 ஆக இருக்கலாம்.

இதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய மாடல்கள் முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். என்று எதிர்பார்க்கப்படுகிறது கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டின் விலை ரூ.1,72,999 ஆக இருக்கலாம்.

மேலும் போல்ட் மாடல் ஆனது சிங்கிள் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை துல்லியமாக இருந்தால், கூகு ள் பிக்சல் 10 சீரிஸ் ஆனது கடந்த 2024 ஆம் ஆண்டில் அறிமுகமான பிக்சல் 9 சீரீஸின் அதே விலைக்கு அறிமுகமாகும்.

பிக்சல் 10 சீரீஸ் மீது என்னென்ன அறிமுக சலுகைகள் அறிவிக்கப்படலாம்? கூகுள் நிறுவனம் அதன் அனைத்து பிக்சல் 10 சீரீஸ் மாடல்களுக்கும் வங்கி தள்ளுபடிகளை வழங்கக்கூடும் என்றும், ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் விஅதுகுறித்த வரங்கள் வெளியிடப்படும் என்றும் ஸ்மார்ட்பிரிக்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.

இதுவொருபக்கம் இருக்க கூகுள் ஒரு பிரத்யேக சலுகையையும் அறிவித்துள்ளது. கூகுளின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று மதியம் 12:30 மணிக்குள் கூகுள் இ-ஸ்டோரில் இருந்து மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களுக்கு சப்ஸ்க்ரைப் செய்பவர்கள் (Subscribe to marketing emails) பிக்சல் 10 வாங்குதல்களில் பிரத்யேக சலுகையை பெற முடியும்.

முன்னதாக வெளியான சில லீக்ஸ் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) திட்டத்தின் ஆறு மாத சந்தாவை இலவசமாக பெறுவார்கள். இதன்கீழ் ஜெமினை மேம்பட்ட அம்சங்கள் மற்றும் 2டிபி கூகுள் ஒன் ஸ்டோரேஜ் ஆகியவைகள் கிடைக்கும் என்று பரிந்துரைத்து உள்ளன.

இதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோ அல்லது கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் அல்லது கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள், கூகுள் ஏஐ ப்ரோவிற்கான முழு வருட சந்தாவையும் பெறுவார்கள். கூடுதலாக, அனைத்து பிக்சல் 10 சீரீஸை வாங்குபவர்களும் 6 மாத காலத்திற்கான ஃபிட்பிட் பிரீமியத்தையும்,3 மாத கால யூட்யூப் பிரீமியத்தையும் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Pixel 10 Pro Pixel 10 Pro XL Pixel 10 Pro Fold India Price Leaked Ahead Aug 20 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X