Home
Mobile

வேட்டிய மடிச்சு கட்டி இறங்கி அடிக்கும் Google.. ரூ.10,000 ஆபர்.. பரபரப்பாகும் Pixel 10 சீரீஸ் விற்பனை!

கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களாக அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 10 சீரிஸ் இன்று முதல் (ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல்) இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. நினைவூட்டும் வண்ணம் கூகுள் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் அதன் 'மேட் பை கூகுள்' நிகழ்வில் பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஆகிய 4 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

இதற்கிடையில் இன்று கூகுள் பிக்சல் 10 சீரீஸின் முதல் 3 மாடல்கள் ஆனா பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகியவைகள் இன்று (ஆக.28) காலை 10 மணி முதல் விற்பனைக்கு வர உள்ளன. பிக்சல் 10 சீரிஸின் கீழ் அறிமுகமான இன்னொரு மாடலும், போல்டபிள் ஸ்மார்ட்போனுமான பிக்சல் 10 ப்ரோ போல்ட்டின் விற்பனை பின்னர் நடக்கும்.

ரூ.10,000 ஆபர்.. பரபரப்பாகும் Pixel 10 சீரீஸ் விற்பனை!

கூகுள் பிக்சல் 10 சீரீஸ் விலை விவரங்கள்: கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் ககலர்களில் வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய 2 மாடல்களின் அதே 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இவ்விரு மாடல்களும் ஜேட், மூன்ஸ்டோன் மற்றும் அப்சிடியன் கலர்களில் வாங்க கிடைக்கும்

கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மூன்ஸ்டோன் மற்றும் ஜேட் கலர்களில் வெளியாகியுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி (இன்று அல்ல) இது பின்னர் விற்பனைக்கு வரும்.

கூகுள் பிக்சல் 10 சீரீஸ் விற்பனை மற்றும் சலுகை விவரங்கள்: எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகள் (HDFC Bank credit cards) மற்றும் ஈஸிஇஎம்ஐ (EASYEMI) வழியாக கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும்.

மேலும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய மாடல்களை வாங்கும் போது, எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈஸிஇஎம்ஐ-ஐ பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 உடனடி கேஷ்பேக் (Instant Cashback) கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது - பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart), க்ரோமா (Croma), விஜய் சேல்ஸ் (Vijay Sales), கூகுள் ஸ்டோர் (Google Store) மற்றும் பிற பார்ட்னர் ரீடெயில் விற்பனையாளர்கள் வழியாக வாங்க கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை 1,080 × 2,424 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்) உடனான 6.3-இன்ச் புல் எச்டி பிளஸ் ஓஎல்இடி சூப்பர் ஆக்சுவா டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். கூகுள் ஜெமினை ஆதரவு உடன் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆனது மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டமை வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 5எக்ஸ் ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா அமைப்பில் கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள் உள்ளன

பேட்டரியை பொறுத்தவரை 4970mAh பேட்டரி உடன் வருகிறது, இது 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு மற்றும் 15W வரையிலான க்யூஐ2 (Qi2) வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டுள்ளது. ஹீட் மேனேஜ்மென்டதிற்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர் உடன் வரும் பிக்சல் 10 ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Pixel 10 Pro Pixel 10 Pro XL India Sale Started Check Out Price Details Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X