Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. முழுசா ரூ.10,000 குறைப்பு.. Pixel 10 சீரிஸ் சேலுக்கு ரெடி.. 12GB ரேம்.. OIS கேமரா!

இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ரூ.10,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைப்பதால், ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவிந்து வருகிறது. இந்த பிக்சல் 10 சீரிஸ் மாடல்களின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் பிக்சல் 10 விலை (Google Pixel 10 Price): இந்த பிக்சல் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.7,000 உடனடி பேங்க் டிஸ்கவண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வேண்டும்.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. முழுசா ரூ.10,000 குறைப்பு.. சேலுக்கு ரெடி!

அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷன் மூலம் ஆர்டர் செய்தாலும் ரூ.7,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். கூடுதலாக 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதற்கும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வேண்டும். அப்சிடியன் (Obsidian), ப்ரோஸ்ட் (Frost), லெமன்கிராஸ் (Lemongrass) மற்றும் இன்டிகோ (Indigo) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ விலை (Google Pixel 10 Pro Price): இந்த பிக்சல் ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது. ரூ.10,000 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.99,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.

அதேபோல பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.4,000 உடனடி டிஸ்வுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ,1,04,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் அப்சிடியன் (Obsidian), போர்ஸ்லைன் (Porcelain), மூன்ஸ்டோன் (Moonstone) மற்றும் ஜேட் (Jade) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. முழுசா ரூ.10,000 குறைப்பு.. சேலுக்கு ரெடி!

கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் விலை (Google Pixel 10 Pro XL Price): இந்த ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,24,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.10,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. இதற்கும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும்.

மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.4,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் மூன்ஸ்டோன் கலர் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.5,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ், அதிகபட்சம் 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.

பிக்சல் 10 போனில் 6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, கூகுன் டென்சார் ஜி5 3என்எம் சிப்செட் மற்றும் டைட்டான் எம்2 செக்யூரிட்டி சிப்செட் கிடைக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி செல்பீ கேமரா + 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 10.5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 4970mAh பேட்டரி, 29W சார்ஜிங் கிடைக்கிறது.

பிக்சல் 10 ப்ரோவில் 6.3 இன்ச் டிஸ்பிளே உள்ளது. ப்ரோ எக்ஸ்எல்லில் 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இரண்டிலும் டென்சார் ஜி5 மற்றும் டைட்டன் எம்3 செக்யூரிட்டி உள்ளது. அதேபோல 50 எம்பி மெயின் + 48 எம்பி அல்ட்ரா வைடு + 48 எம்பி டெலிபோட்டோ உள்ளது. ப்ரோவில் 4870mAh பேட்டரி + 29W சார்ஜிங் மற்றும் எக்ஸ்எல்லில் பேட்டரி + 39W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Pixel 10 Pro Pixel 10 Pro XL Available For Sale Today in India Check Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X