Home
Mobile

Flipkart போட்டான் பாரு ஆபர்.. புது Pixel போன் மீது ரூ.20000 தள்ளுபடி.. மே.9-ல் அடிச்சு புடிச்சு வாங்க போறாங்க!

பிளிப்கார்ட்டின் 'சாசா லேலே' விற்பனை (Flipkart Sasa Lele Sale) விரைவில் தொடங்க உள்ளது. இது புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டுள்ள ஒவ்வொருவரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் - பல அட்டகாசமான மொபைல் போன் டீல்களை, ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி வருகிறது

அதனொரு பகுதியாக கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) மீதான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.79,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிக்சல் போன், வருகிற மே 9-ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ.59,999-க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart போட்டான் பாரு ஆபர்.. புது Pixel போன் மீது ரூ.20000 தள்ளுபடி!

கூகுள் பிக்சல் 10 சலுகை: தற்போது, ​​பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.74,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் குறிப்பிடும் ரூ.59,999 என்பது ஒரு நிலையான விலையாக இல்லாமல், அனைத்து சலுகைகளையும் சேர்த்த பிறகு கிடைக்கக்கூடிய மிக குறைந்த விலையாக இருக்கலாம்.

அதாவது இது அடிப்படை தள்ளுபடி, எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி, மற்றும் உங்களிடம் எக்ஸ்சேன்ஜ் செய்ய பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளின் கலவையாக இருக்கலாம். விற்பனை தொடங்கியதும் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும்.

கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்

- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டமை (Material You Expressive design system) வழங்குகிறது

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்

- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- வெப்ப மேலாண்மைக்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபை, என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவு

OPINION: பிக்சல் 10 என்பது எப்போதும் பேப்பரில் முன்னணி அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக மட்டுமே இருந்ததில்லை, மாறாக ஒரு முழுமையான தொகுப்பாகவே இருந்து வந்துள்ளது. அதன் மென்பொருள், அனுபவத்தின் ஒரு பெரிய பகுதியாக விளங்குகிறது; அது நேர்த்தியாகவும், ஒழுங்காகவும், நல்ல விதத்தில் கணிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

கேமராக்களும் இதே தத்துவத்தையே பின்பற்றுகின்றன. அவை உச்சகட்டங்களை தேடுவதில்லை, ஆனால் நம்பகமானவையாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக நல்ல போன் தான். ஆனால் ரூ.59,999 என்பது ஒரு குறைந்தபட்ச விலையே தவிர, உறுதிசெய்யப்பட்ட நேரடி தள்ளுபடி அல்ல என்பதால், அந்த விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாக அறிய மே 9 ஆம் தேதி வரை காத்திருப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Offer Discount Details on Flipkart SaSa LeLe Sale Starting May 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X