ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. சாட்டிலைட் WhatsApp காலிங்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4970mAh பேட்டரி!
கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போனானது உலகின் முதல் சாட்டிலைட் வாட்ஸ்அப் காலிங் பீச்சர் கொண்ட மாடலாக இருக்கப் போகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் இந்த பீச்சர் கிடைக்க இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ஏற்கனவே ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த சாட்டிலைட் பீச்சருடன் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும்படியான பீச்சர்களுடன் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) மாடல்கள் வெளியாகின. இதில் ஆரம்ப விலை மாடலாக கூகுள் பிக்சல் 10 கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கும் இந்த பிக்சல் மாடலின் விற்பனை ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இந்த நேரத்தில் சாட்டிலைட் கனெக்டிவிட்டி மூலம் வாட்ஸ்அப் கால்களை செய்துகொள்ளும்படி இதில் பீச்சர் கொடுக்கப்படுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே சாட்டிலைட் கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. இருப்பினும், அதில் வாட்ஸ்அப் காலிங் செய்து கொள்ள முடியாது.
ஆனால், கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சாட்டிலைட் கனெக்டிவிட்டி மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை வாட்ஸ்அப்-பில் செய்து கொள்ளலாம். உண்மையில் உலகளவில் இந்த சாட்டிலைட் வாட்ஸ்அப் காலிங் பீச்சரை கொடுக்கும் முதல் மாடலாக கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் இருக்கிறது. மற்ற பிக்சல் 10 மாடல்களிலும் இந்த பீச்சர் கிடைக்க இருக்கிறது. இதற்கான கட்டணம் சாட்டிலைட்க்கு ஏற்ப இருக்கும்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிய பிறகே முழு விவரங்கள் தெரியவரும். இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட், போனஸ் போன்ற அறிமுக சலுகைகள் போக ரூ.67,999 பட்ஜெட்டில் பிளிப்கார்ட் தளத்தில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): இந்த பிக்சல் ஸ்மார்ட்போனில் கூகுள் டென்சார் ஜி5 (Google Tensor G5) சிப்செட் கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் வருகிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், 7 வருட ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 கொண்ட முதல் மாடலாக இருக்கிறது.
மேலும், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. ஆகவே, காம்பாக்ட் டிசைனில் கிடைக்க இருக்கிறது. 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.
48 எம்பி வைடு கேமரா மெயின் கேமரா (ஓஐஎஸ் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி) + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் 5X ஆப்டிகல் ஜூமிங் வருகிறது. மேலும், 20X சூப்பர்ரெஸ் ஜூமிங் செய்து கொள்ளலாம். 10.5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4970mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கிறது. இன்டிகோ (Indigo), ப்ரோஸ்ட் (Frost), லெமன்கிராஸ் (Lemongrass) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிரீமியம் கூகுள் ஏஐ பீச்சர்களையும் இந்த பிக்சல் 10 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








