Home
Mobile

மொத்தமா வேற மாறி.. வெயிட்டிங் மோடுக்கு போயாச்சு.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4700mAh பேட்டரி.. எந்த மாடல்?

கூகுள் பிக்சல் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) ஆகிய மாடல்களின் கலர் வேரியண்ட் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஏற்கனவே, கேமரா பீச்சர்கள் கசிந்தன. இப்போது, இவை கசிந்துள்ளது. இதில் கூகுள் பிக்சல் 10 மாடலின் முக்கிய பீச்சர்களும் அடங்கும். முதலில் என்னென்ன கலர்களில் கிடைக்க இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

கூகுள் பிக்சல் 9 சீரிஸ் மாடல்களானது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகின. ஆகவே, இந்த ஆகஸ்ட் மாதம் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏற்ப கூகுள் பிக்சல் 10 சீரிஸ் மாடல்களின் பீச்சர்கள், கலர் மற்றும் டிசைன் விவரங்கள் வெளியாகி வருகின்றன. இப்போது, ஒட்டுமொத்த கலர் வேரியண்ட்களும் கசிந்துள்ளன.

மொத்தமா வேற மாறி.. வெயிட்டிங் மோடுக்கு போயாச்சு.. SONY கேமரா.. மாடல்?

ஆகவே, கூகுள் பிக்சல் 10 போனில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black), ப்ளூ (Blue), ஐரிஸ் பர்பிள் (Iris Purple) மற்றும் லிமோன்செல்லோ எல்லோ (Limoncello Yellow) வெளியாக இருக்கிறது. அதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடல்களில் அப்சிடியன் பிளாக், கிரீன் (Green), ஸ்டெர்லிங் கிரே (Sterling Grey) மற்றும் போர்சலைன் ஒயிட் (Porcelain White) வருகிறது.

இதற்கு முன்பு வெளியான கேமரா பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்வோம். பிக்சல் மாடல்களில் 48 எம்பி மெயின் கேமரா மட்டுமே வழக்கமாக கிடைக்கும். ஆனால், இந்த பிக்சல் 10 சீரிஸ் மாடல்களில் 50 எம்பி மெயின் கிடைக்க இருக்கிறது. கூகுள் பிக்சல் 10 மாடலை பொறுத்தவரையில், சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது.

13 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) சென்சார் கிடைக்க இருக்கிறது. சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சாருடன் 11 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. அதேபோல 11 எம்பி செல்பீ ஷூட்டரிலும் சாம்சங் 3ஜே1 சென்சார் + ஆட்டோ போகஸ் கிடைக்க இருக்கிறது. கூகுள் பிக்சல் 10 ப்ரோவில் கேமரா அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமா வேற மாறி.. வெயிட்டிங் மோடுக்கு போயாச்சு.. SONY கேமரா.. மாடல்?

ஆகவே, சாம்சங் ஜிஎன்வி (Samsung GNV) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 48 எம்பி டெலிபோட்டோ + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த 2 செகண்டரி கேமராக்களிலும் சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சார் கிடைக்கிறது. இதே கேமரா செட்டப்பிலேயே கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் கிடைக்க இருக்கிறது.

அதேபோல 2 மாடல்களிலும் 48 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் அதில் சோனிஐஎம்எக்ஸ்858 சென்சார் கிடைக்க இருக்கிறது. இந்த மாடல்களுடன் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு (Google Pixel 10 Pro Fold) மாடலும் கிடைக்க இருக்கிறது. இதில் சாம்சங் ஜிஎன்8 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சாம்சங் 3ஜே1 சென்சாருடன் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 11 எம்பி செல்பீ கிடைக்க இருக்கிறது.

Take a Poll

இவற்றில் கூகுள் பிக்சல் மாடலின் டிஸ்பிளே, பேட்டரி போன்ற கூடுதல் பீச்சர்கள் கசிந்துள்ளன. ஆகவே, இந்த போனில் 6.3 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் வருகிறது. டென்சார் ஜி5 3என்எம் சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. 4700mAh பேட்டரி, 37W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது.

Image Source: @OnLeaks @Androidheadline

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 Color Options Triple Cameras Design Tipped Along With Pixel 10 Pro Pixel 10 Pro XL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X