ஒட்டுமொத்த ஆன்லைன் ஷாப்பிங் சமுதாயமும் ஷாக்.. லேட்டஸ்ட் Google Pixel மீது இப்படி ஒரு விலை குறைப்பா!
ஒன்பிளஸ் 15, ஐக்யூ 15, ரியல்மி ஜிடி 8 ப்ரோ, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ, விவோ எக்ஸ்300 ப்ரோ என வரிசையாக.. அடுத்தடுத்த மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக - இப்போதைக்கு எந்த புதிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாக போவதில்லை.
ஆகவே எதிர்பார்த்தபடியே முன்னதாக அறிமுகமான பிக்சல் ஸ்மார்ட்போன்களின் மீது விலை குறைப்பு, டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் கிடைக்க தொடங்கியுள்ளது. அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் மாடலான கூகுள் பிக்சல் 10 5ஜி (Google Pixel 0 5G) மாடலின் விலையை குறைத்துள்ளது.

கடந்த 2025 ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று மற்ற பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து அறிமுகமான பிக்சல் 10 மாண்டலின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை இப்போது ரூ.70,000 க்கு நெருக்கமாக வாங்க கிடைக்கிறது
அமேசான் இந்தியாவில் தற்போது (இதை எழுதும் நேரத்தில்) இது ரூ.70,700 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் அசல் அறிமுக விலையை விட தோராயமாக ரூ.10,000 குறைவாகும் (சரியாக சொன்னால் ரூ.9299 விலை குறைப்பு). நினைவூட்டும் வண்ணம், கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் ஆகிய 4 கலர்களில் ரூ.79,999 க்கு அறிமுகமானது.
மேற்கண்ட விலை குறைப்போடு சேர்த்து, வங்கி சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்க முடியும். நீங்கள் அமேசான் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வைத்து இருந்தால், பிரைம் மெம்பர் ஆக இருந்தால் தோராயமாக ரூ.3000 உடனடி கேஷ்பேக்கை பெறலாம்; பிரைம் மெம்பர் ஆக இல்லையென்றால் ரூ.2000 கேஷ்பேக்கை பெறலாம்
இதன்கீழ் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விலையை சுமார் ரூ.67,000 ஆக குறைக்க முடியும். கூடுதலாக உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் பிக்சல் 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க முடியும். அமேசான் இந்தியா வழியாக கிடைக்கும் இந்த ஆபர் லிமிடெட் டைம் ஆபர் ஆக கூட இருக்கலாம். எனவே ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் வேகமாக செயல்படவும்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- இசிம் ஆதரவு
- 1080 × 2424 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3 என்எம் டென்சர் ஜி5 சிப்செட்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- கூகுள் ஜெமினை (Google Gemini) ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டம்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5எக்ஸ் ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான க்யூஐ2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- வெப்ப மேலாண்மைக்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்


Click it and Unblock the Notifications








