வேற மாறி வந்து நிக்கும் Pixel Fold.. 2 வருஷம் வெயிட் பண்ண வச்சதுக்கு ஃபுல் வொர்த்து.. Google-னா சும்மாவா!
கூகுள் (Google) நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் (First Foldable Smartphone) ஆன பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) எப்போது அறிமுகமாகும் என்கிற காத்திருப்பு.. கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஏனென்றால் கூகுள் முதல்முறையாக அதன் பிக்சல் ஃபோல்ட்டின் ப்ரோமோஷனல் வீடியோவை (Promotional Video) வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக வெறும் லீக்ஸ் (Leaks) மற்றும் வதந்திகளில் (Rumours) மட்டுமே சிக்கி வந்த பிக்சல் ஃபோல்டின் அறிமுகம், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போன் எப்போது அறிமுகமாகும்? இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை வழங்கும்? இதோ விவரங்கள்:

பிக்சல் ஃபோல்ட் எப்போது அறிமுகமாகும்? பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள கூகுள் ஐ/ஓ 2023 (Google I/O 2023) நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படலாம்.
அந்நாளில் அறிமுகமாகும் ஒரே ஒரு கூகுள் தயாரிப்பாக (Google Product) பிக்சல் ஃபோல்ட் இருக்காது. ஏனென்றால் மே 10 ஆம் தேதியன்று நடக்கும் கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் பிக்சல் 7ஏ (Pixel 7a) ஸ்மார்ட்போனோடு சேர்த்து பிக்சல் டேப்லெட்டும் (Google Pixel) அறிமுகம் செய்யப்படலாம்.
பிக்சல் ஃபோல்ட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? "மே தி ஃபோல்ட் பி வித் யூ" (May The Fold Be With You) என்கிற தலைப்பின் கீழ் கூகுள் வெளியிட்டுள்ள ப்ரோமோஷனல் வீடியோ வழியாக, பிக்சல் ஃபோல்டின் மொத்த வடிவமைப்பையும் வெளிப்படையாக பார்க்க முடிகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, சாம்சங்கின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4) மாடலில் உள்ள குறுகிய கவர் டிஸ்பிளேவை (Cover display) போல் இல்லாமல், பிக்சல் ஃபோல்ட்டின் கவர் டிஸ்பிளேவானது சற்றே அகலமானதாக தெரிகிறது.
அதாவது இது ஒப்போ ஃபைண்ட் என் (Oppo Find N) மற்றும் ஃபைண்ட் என்2 (Find N2) மாடல்களில் பார்த்ததை போலவே உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, பிக்சல் 7 ப்ரோவில் காணப்படும் அதே ஹரிசாண்டல் கேமரா பாரை (Horizontal camera bar) பேக் செய்கிறது.
இதன் ரியர் கேமரா செட்டப்பில் மூன்று கேமராக்களுக்கான கட்அவுட்கள் உள்ளன. அவைகள் வைட், அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட்டோ சென்சார்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. செல்பீக்களுக்காக 2 கேமராக்கள் இருக்கும் என்பதை கூகுளின் ப்ரோமோஷனல் வீடியோ வெளிப்படுத்துகிறது. ஒன்று கவர் டிஸ்பிளேவில் உள்ளது, இரண்டாவது மெயின் டிஸ்பிளேவில் உள்ளது.
வடிவமைப்பு (Design) வெளிப்படுத்தப்பட்ட அளவிற்கு பிக்சல் ஃபோல்டின் அம்சங்கள் (Specifications) வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் எதிர்பார்க்கபடும் அம்சங்களை பொறுத்தவரை பிக்சல் ஃபோல்டில் உள்ள கவர் டிஸ்ப்ளேவின் அளவு 5.8-இன்ச் ஆக இருக்கலாம்; இதன் மெயின் டிஸ்பிளேவின் அளவானது 7.6-இன்ச் ஆக இருக்கலாம்; அதாவது இதுவொரு மினி டேப்லெட் போல இருக்கும்!
கூகுளின் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனானது பிக்சல் 7 சீரிஸில் உள்ள கூகுள் டென்சர் ஜி2 (Google Tensor G2) ப்ராசஸர் மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் வைட் கேமரா + 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 10.2 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவைகளை பேக் செய்யலாம்.
பிக்சல் ஃபோல்ட் என்ன விலைக்கு வரும்? எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது 1700 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படின் தோராயமாக ரூ.1.40 லட்சம் என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம் பிக்சல் ஃபோல்டின் துல்லியமான விலை நிர்ணயம் மே 10 ஆம் தேதி நடக்கும் கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








