7 வருஷம் தர்ற Google எங்க.. 1 வருஷம் கூட தர்றாத நீ எங்க.. Android 15 Update-க்கு கெஞ்ச விடும் சீன நிறுவனம்!
Infinix Phones Android 15 Update: கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வெளியீடு (Android 15 release) கூடிய விரைவில் நடக்க உள்ளது. இது வருகிற அக்டோபர் மாத வாக்கில் பொதுமக்களுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஒன் யுஐ-க்கான (One UI) சாம்சங் மற்றும் எக்ஸ்ஓஎஸ்-க்கான (XOS) இன்பினிக்ஸ் போன்ற பிராண்டுகள் ஏற்கனவே தங்களுடைய கஸ்டம் ஸ்கின் வெர்ஷனில் வேலை செய்ய தொடங்கிவிட்டன. அதாவது ஆண்ட்ராய்டு 15 ஆப்ரேட்டிங் சிஸ்டமிற்கான தங்களுடைய சொந்த ஓஎஸ் பதிப்புகளில் பணிபுரிய தொடங்கிவிட்டன.
இன்பினிக்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) ஸ்கின்னில் பணிபுரிகிறது. சரியான நேரத்தில் சாஃப்ட்வேர் அப்டேட்களை வெளியிடும் (Releasing Software Updates on time) நிறுவனங்களின் பட்டியலில் "சத்தியமாக" இன்பினிக்ஸ் இல்லை என்பதை நாங்களே ஒற்றுக்கொள்வோம்.

ஆனால் இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த போக்கை மாற்ற விரும்புவது போல் தெரிகிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் சில புதிய ஸ்மார்ட்போன்களை ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக எந்தெந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் கிடைக்கலாம்: அதாவது எந்தெந்த இன்பினிக்ஸ் போன்கள் ஆண்ட்ராய்டு 15-க்கு தகுதியானவைகள் என்கிற பட்டியல் இதோ:
01. இன்பினிக்ஸ் ஸீரோ 40 (Infinix Zero 40)
02. இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி (Infinix Zero 40 5G)
03. இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40)
04. இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G)
05. இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி (Infinix Note 40X 5G)
06. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro)
07. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 4ஜி( Infinix Note 40 Pro 4G)
08. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus)
09. இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infinix GT 20 Pro)
10 .இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் (Infinix Xpad)
இந்நிறுவனத்திடம் தெளிவான சாஃப்ட்வேர் அப்டேட் கொள்கை இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே மேற்கண்ட பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன் உங்களிடம் இருந்தாலும் கூட, அதற்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ன் அடுத்த பெரிய அப்டேட் கிடைக்குமா என்று சொல்வது எப்போதுமே மிகவும் கடினமான காரியமே ஆகும். சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் 7 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களை வழங்கினாலும், இன்பினிக்ஸ் வெறும் 2 அப்டேட்களை மட்டுமே உறுதியளிக்கிறது.
இதுவும்,நோட் 40 ப்ரோ மற்றும் நோட் 40 ப்ரோ பிளஸ் உள்ளிட்ட ஹை - எண்ட் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதைவிட வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கீழ் அறிமுகம் செய்யப்படும் பட்ஜெட் விலை போன்களுக்கு 1 ஆண்ட்ராய்டு அப்டேட்டை கூட இன்பினிக்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளிப்பதில்லை.
நினைவூட்டும் வண்ணம் மிகவும் சமீபத்தில் தான் இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் ரேசிங் எடிஷனின் கீழ் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus) என்கிற 2 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இருப்பினும், இந்த விலைகள் அசல் விலை நிர்ணயங்கள் அல்ல. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, மேற்கண்ட விலைகள் - வங்கி தள்ளுபடிகளை உட்படுத்திய ஆபர் விலையாகும்.


Click it and Unblock the Notifications








