கூகுள் நெக்சஸ் பிரைம் மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட்: ஒரு ஒப்பீடு

By Super
|
கூகுள் நெக்சஸ் பிரைம் மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட்: ஒரு ஒப்பீடு
மொபைல் உலகில் அடுத்தடுத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்மார்ட்போன்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டு வருவதால் போட்டி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உயர்ந்த தொழில் நுட்பத்துடன் ஒரு மொபைல் வெளிவந்தால், அடுத்த நாளே அதைவிட அதிக வசதியுடன் இன்னொரு மொபைல் வெளிவருகிறது. ஒன்றையொன்று விஞ்சும் அளவுக்கு அனைத்து மொபைல்களும் சிறப்பான தகுதிகளுடன் தான் விற்பனைக்கு வருகிறது.

இதனால் எது மிக சிறப்பான மொபைல் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம்தான் மிஞ்சுகிறது. இந்த இடத்தில் வாடிக்கையாளர்களின் சாமர்த்தியம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

வளர்ந்து வரும் மொபைல் விஞ்ஞானத்தில் கேலக்ஸி நோட் என்ற ஸ்மார்ட்மொபைலை வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். நெக்சஸ் பிரைம் என்ற ஸ்மார்ட்போனை கூகுள் நிறுவனமும் வெளியிட உள்ளது. இந்த இரு மொபைல்களுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

எனவே, இதில் எது சிறந்தது என்பதை கண்டறிய சிறிய ஒப்பீட்டு அலசலை காணலாம். கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. அதேவேளை,கூகுள் நெக்சஸ் பிரைம் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்வெட்ஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

சூப்பர் அமோல்டு 5.3 இஞ்ச் அகன்ற திரையை கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி நோட் மொபைல் 1280 X 800 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கிறது. இதனால் எதையும் கண்ணாடி போல் தெளிவாகப் பார்க்க முடியும். கூகுள் நெக்சஸ் பிரைம் மொபைலிலும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட 4.65 இஞ்ச் அமோல்டு திரை கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு மொபைல் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது. இதனால் திரையில் எந்தவிதமான கீரள்களும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் டியூவல் கோர் ஜிஎச்இசட் எக்ஸைனோஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது. நெக்சஸ் பிரைம் மொபைல் 1.2 ஜிஎச்இசட் டியூவல் கோர் பிராசஸர் கொண்டது.

கேலக்ஸி நோட் மொபைலில் உள்ள இன்னொரு சிறப்பை பார்த்தால் அட! என்று வாடிக்கையாளை சொல்ல வைப்பது மட்டும் அல்லாமல், அவர்கள் இருதயத் துடிப்பையும் இன்னும் அதிகரிக்க வைக்கும். இந்த மொபைலில் புகைப்படத்தை அள்ளிக் குவிக்க 8 மெகா பிக்ஸல் கேமராவும், அது போதாதென்று 2 மெகாபிக்ஸல் முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

நெக்சஸ் பிரைம் மொபைலும் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.3 பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவுடன் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு மொபைலிலுமே 1ஜிபி ரேம் வசதியை கொண்டிருக்கும்.

கூகுள் நெக்சஸ் பிரைம் மற்றும் கேலக்ஸி நோட் என்ற ஸ்மார்ட் மொபைல்களில் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம். நெக்சஸ் பிரைம் மொபைல் என்எப்சி தொழில் நுட்பத்துடன் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.இந்த இரு மொபைல்களும் புளூடூத், வைபை, யூஎஸ்பி தொழில் நுட்ப சேவையை வழங்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் மொபைல் 2,500 எம்ஏஎச் கழற்றி மாற்றும் வசதிகொண்ட லித்தியம் அயான் பேட்டரி கொண்டதால் சிறப்பான டாக் டைம் கொடுக்கும். இதற்கு இணையாக நெக்சஸ் பிரைம் மொபைலிலும் 1,750 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி உள்ளதால் அதிக டாக் டைம் மற்றும் அதிக ஸ்டான்-பை டைம் கொடுக்கும்.

சாம்சங் கேலக்ஸி மொபைலுக்கு இணையாக கூகுள் நெக்சஸ் பிரைம் மொபைல் மல்லுக்கட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சாம்சங் கேலக்ஸி மொபைல் ரூ.30,000 விலையில் வாங்கலாம். கூகுள் நெக்சஸ் மொபைல் 30,000 விலையில் இருந்து ரூ.35,000 ஒட்டிய விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X