Home
Mobile

கூகுள் நெக்சஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்-5 ஒரு ஒப்பீட்டு அலசல்!

By Super
கூகுள் நெக்சஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்-5 ஒரு ஒப்பீட்டு அலசல்!
கூகுள், ஆப்பிள் இரண்டு நிறுவனங்களுமே பெரிய அளவில் தொழில் நுட்பங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் இந்த இரண்டு நிறுவனங்களுமே புதிய ஸ்மார்ட் மொபைல்களை களமிறக்க உள்ளது. இந்திய சந்தை, இந்த இரண்டு மொபைல்களையுமே மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்குகிறது.

நெக்சஸ் பிரைம், ஆப்பிள் ஐபோன்-5 என்ற மொபைல்கள் பல அரிய வசதிகளுடன் வெளிவர உள்ளது. கூகுள் நெக்சஸ் பெரிய தொடுதிரை வசதியுடன் வெளிவர இருக்கிறது. இது கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய பேனல் இதற்கு முன்பு பயன்படுத்தியது போல் அலுமினியம் கொண்ட பேனலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன்-5 மொபைல் 4 இஞ்ச் திரை வசதி மற்றும் 960 X 540 ரிசல்யூஷன் கொண்டது. கூகுள் நெக்கசஸ் பிரைம் 4.7 இஞ்ச் திரை வசதியையும், 1280 X 720 ரிசல்யூஷனையும் வழங்குகிறது. ஆப்பிள் ஐபோனைவிடவும் கூகுள் நெக்சஸ் சற்று அதிகமான திரை வசதி கொண்டுள்ளது.

பிராசஸர் பொருத்தவரை கூகுள் நெக்சஸ் பிரைம், ஆப்பிள் ஐபோன்-5 மொபைலை விஞ்சுகிறது. கூகுள் நெக்சஸ் பிரைம் 1.5 ஜிஎச்இசட் டியூவல் கோர் பிராசஸர் ஓஎம்ஏபி சிபியூ பொருத்தப்பட்டுள்ளது. இதோடு 1ஜிபி ரேம் வசதியும் உள்ளது.

ஆப்பிள் ஐபோன்-5 மொபைலில் 1 ஜிஎச்இசட் டியூவல் கோர் ஏஆர்எம் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 512 எம்பி ரேம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. நெக்சஸ் பிரைம் 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. ஆப்பிள் ஐபோன்-5 16 ஜிபி அல்லது 32 ஜிபி அல்லது 64 ஜிபி வசதி கொண்டது.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பொருத்த வரையில் கூகுள் கொஞ்சம் கூடுதல் வசதி கொண்டது. கூகுள் நெக்சஸ் பிரைம் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சேன்விட்ஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ஆப்பிள் ஐபோன், ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

ஆனால் இரண்டு மொபைலின் அப்பரேட்டிங் சிஸ்டமுமே சிறந்த தொழில் நுட்பம் கொண்டது. கூகுள் நெக்சஸ் மொபைலில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 1080பி துல்லியத்தைக் கொண்டது. ஆப்பிள் ஐபோன்-5 மொபைல் 8 மெகா பிகஸல் கேமராவை கொண்டுள்ளது.

இத்தகைய வசதி கொண்ட இந்த இரண்டு மொபைல்களும் ரூ.30,000 விலையில் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மொபைல்களுமே ஏகபோக விற்பனையை அள்ளிக் கொடுக்கும் என்றும், இந்த மாதம் வெளிவரும் என்றும் ஆர்வத்துடன் எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X