ஐபேட் மினிக்கு இணையான வசதிகளை வழங்குமா நெக்சஸ்-7?

Posted By: Staff
ஐபேட் மினிக்கு இணையான வசதிகளை வழங்குமா நெக்சஸ்-7?
இன்று தான் இந்திய ச்ந்தைகளில் வெளியிடப்படுவதாக தகவல்கள் அடுத்து அடுத்து நெக்சஸ்-7 டேப்லட் பற்றி வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த கூகுள் நெக்சஸ்-7 டேப்லட் மற்றும் ஐபேட் மினி டேப்லட்டிற்கும் இடையிலான ஒப்பீடு பற்றி பார்க்கலாம். இதில் தொழில் நுட்ப விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு மின்னனு சாதனமாக இருப்பினும் அதன் இயங்குதளம் மிக முக்கியம். அந்த வகையில் இந்த டேப்லட்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பெரிய வித்தியாசத்தினை கொண்டதாக இருக்கிறது. இதில் நெக்சஸ்-7 டேப்லட் மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாக இருக்கும். ஐபேட் மினி டேப்லட் ஐஓஎஸ்-6

இயங்குதளம் கொண்டு செயல்படும்.

இதனால் ப்ராஜெக்ட் பட்டர், ஆன்ட்ராய்டு பீம், ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் ஆகிய வசதிகளை இந்த டேப்லட்டில் பெறலாம். ஐஓஎஸ் இயங்குதளத்தில் 200 புதிய அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தலாம். இதில் மேம்படுத்தப்பட்ட சிரி, நியூ சஃபாரி ஃபோட்டோஸ், ஆன்ட்ராய்டு பீம் அப்ளிக்கேஷன்கள் ஆகிய வசதியினை பயன்படுத்தலாம்.

நெக்சஸ்-7 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 1 ஜிபி ரேம் சவுகரியங்களை பெறலாம். ஐபேட் மினி டேப்லட்டில் 16 ஜிபி , 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று 3 மெமரி வெர்ஷன்களை பெறலாம்.

நெக்சஸ்-7 டேப்லட்டில் என்எப்சி, ப்ளூடூத், வைபை, யூஎஸ்பி ஆகிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தலாம். 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் இந்த டேப்லட் சிறப்பாக பயனளிக்கும். 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் ஐபேட் மினி டேப்லட் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெக்சஸ்-7 டேப்லட் 4,325 எம்ஏஎச் 16 டபிள்யூஎச்ஆர் லித்தியம் பாலிமர் பேட்டரியில் 9.5 மணி நேரம் பேக்கப் வசதியினை பெறலாம். ஐபேட் மினி டேப்லட்டில் இருக்கும் 16.3 டபிள்யூஎச்ஆர் லித்தியம் பாலிமர் பேட்டரி 10 மணி நேரம் பேக்கப் டைமினை அளிக்கும்.

நெக்சஸ்-7 டேப்லட் ரூ. 19981 விலையினையும், ஐபேட் மினி டேப்லட் ரூ. 25,000 விலையில் இருந்து ரூ. 33,000 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும்.  இந்த செய்தியினை ஆங்கிலத்திலும் படிக்கலாம்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot