விரைவில் வெள்ளை வண்ணத்தில் கூகுள் நெக்சுஸ் 4 ஸ்மார்ட்போன்

By Karthikeyan
|
விரைவில் வெள்ளை வண்ணத்தில் கூகுள் நெக்சுஸ் 4 ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவனத்துடன் சேர்ந்து சமீபத்தில் நெக்சுஸ் 4 என்று ஸ்மார்ட்போனை கூகுள் சமீபத்தில் களமிறக்கி இருந்தது. தற்போது இந்த போன் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த நெக்சுஸ் 4 போன் வெள்ளை நிறத்தில் மிக விரைவில் வெளிவர இருப்பதாக ஒரு முக்கிய தகவல் தெரிவித்திருக்கிறது. அதோடு கூகுள் நெக்சஸ் 7 டேப்லெட்டும் வெள்ளை நிறத்தில் வெளிவர இருக்கிறது.

இந்த நெக்சுஸ் 4 போன் 4.7 இன்ச் அளவில் சூப்பரான ரிசலூசன் கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸர் கொண்டிருப்பதால் இந்த போன் மிகவும் வேகமாக இயங்குகிறது.

கேமராவைப் பொருத்தமட்டில் இந்த போனின் பின்புறம் 8எம்பி கேமராவும் வீடியோ உரையாடலுக்காக 1.3எம்பி முகப்புக் கேமராவும் உள்ளன. மேலும் இந்த போன் 2ஜிபி ரேமுடன் வருகிறது. இந்த போனை நவம்பர் 13 முதல் கூகுள் விற்பனை செய்து வருகிறது.

இந்த போன் விற்பனைக்கு வந்த சிறிது நேரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் இதர நாடுகளில் விற்றுவிட்டதாக தகவல்கள் வந்தன. அதனால் ஏராளமான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த போன் 299 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது.

இந்த நெக்சுஸ் 4 போன் வெள்ளை நிறத்தில் வந்தால் அது பார்ப்பதற்கு இன்னும் ஸ்டைலாகவும் மற்றும் அழகாகவும் இருக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X