கூகுளுக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் சண்டை

By Super
|
கூகுளுக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் சண்டை

எடுத்தவுடன் எந்தமுடிவுக்கும் வந்துவிடாதீர்கள். அதாவது, கூகுள் நெக்சஸ் 10க்கும் ஆப்பிளின் ஐபேட் 4க்குமிடையில் பலத்த போட்டிநிலவுவதாக சமீபத்திய ஆய்வுகளைக்கொண்ட சந்தைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த இரண்டு டேப்லட்களும் ஏறத்தாழ ஒரே நுற்பக்கூறுகள் கொண்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டும் ஒரே திரை அளவுகளைக்கொண்டுள்ளது. அதாவது 10" ஆகும்.கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளதைக்கொண்ட டேப்லெட்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிதுவருவதாகவும் அது எந்த அளவெனில், 2011 கடைசி காலாண்டில் 29.1 சதவிகிதத்திலிருந்து 2012ன் அதே காலகட்டத்தில் இதனளவு 41.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.அதேநேரம் ஐபேட் டேப்லெட்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துவருகிறது. முன்னர் 64.5% இருந்த விகிதம் இப்பொழுது 56.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.ஆன்ட்ராய்டு டேப்லெட்களின் சந்தை மதிப்பு அதிகரித்ததற்கு முக்கியகாரணமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுவது கூகுளின் நெக்சஸ் 7. ஆனால் ஆப்பிளின் ஐபேடில் ஐஒஎஸ் 6 பயன்படுத்தப்படுகிறது.ஆப்பிளின் ஐபேட் 4 மற்றும் ஆன்ட்ராய்டு நெக்சஸ் 10 ஆகியவற்றிற்கான நுட்பக்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.எடை மற்றும் அளவுகள்: நெக்சஸ் 10, 263.8 x 177.8 x 8.9 என்ற அளவிலும் 603 கிராம்கள் எடையுடனும், ஐபேட் 4, 241.2 x 185.7 x 9.4 என்ற அளவிலும் 652 கிராம்கள் எடையுடனும் இருக்கும்.

திரை: நெக்சஸ் 10, 10.1″ டச்ஸ்க்ரீன் மற்றும் 2560 x 1600 பிக்சல் ரெசுலூசன். ஐபேட் 4, 9.7" LED டச் திரை மற்றும் IPS தொளில்நுட்பதிலுள்ள 2048 x 1536 பிக்சல் ரெசுலூசன்.

ப்ராசசர்: நெக்சஸ் 10, 1.7GHZ கார்டெக்ஸ் A15 டூயல் கோர் 9 ப்ராசசர். ஐபேட் 4, ஆப்பிள் A6X ப்ராசசர்.

இயங்குதளம்: நெக்சஸ் 10, ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன். ஐபேட் 4, ஆப்பிள் ஐஒஎஸ் 6 பயன்படுத்தப்படுகிறது.

கேமரா: நெக்சஸ் 10 மற்றும் ஐபேட் 4 ஆகிய இரண்டும் 5எம்பி ரியர் கேமரா பயன்படுத்துகிறது.

நினைவகம்: நெக்சஸ் 10, 16ஜிபி/32ஜிபி உள்நினைவகம், 2ஜிபி ரேம் மற்றும் ஐபேட் 4ல் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்நினைவகம், 512எம்பி ரேம் உள்ளது.

இணைப்பான்கள்: மைக்ரோ USB, WiFi, ப்ளுடூத், 3G மற்றும் உள்ளார்ந்த GPS.

பேட்டரி: நெக்சஸ் 10, 9,000mAh பேட்டரியில் 9 மணிநேரம் பேசும்பொழுதும், 500 மணிநேர ஸ்டான்ட்பை வசதியும் உள்ளது.

ஐபேட் 4ல் 10 மணிநேர பேக்கப் வசதியும் உள்ளது.விலை: ஐபேட் 4 விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நெக்சஸ் 10 விலை ரூ.32,850 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடைசியாக எந்த இயங்குதளம் கொண்ட டேப்லெட் வாங்குவதென்பது பயனாலரைப்பொருத்ததென்பதே.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X