Home
Mobile

அக்டோபர் 9: மிகவும் எதிர்பார்த்த கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல் அறிமுகம்.!

இக்கருவிகள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது.

இந்தியாவில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. மேலும் தற்சமயம் கூகுள் நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி விரைவில் கூகுள் பிக்சல் 3 மற்றம் பிக்சல் 3எக்ஸ்எல் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

மிகவும் எதிர்பார்த்த கூகுள் பிக்சல் 3 & பிக்சல் 3எக்ஸ்எல் அறிமுகம்.!

வரும் அக்டோபர் 9-ம் தேதி அன்று இந்த கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்த கூகுள் நிறுவனம். மேலும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்ற அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வெளிவரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

மென்பொருள்:

மென்பொருள்:

இக்கருவிகள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு 4ஜிபி ரேம் முதல் 256ஜிபி மெமரி வரை இந்த ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

 கேமரா

கேமரா

இப்போது வெளிவரும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா வசதி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு
செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்களின் கேமராக்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல சாதனங்கள் வெளிவரும்.

வண்ணங்கள்:

வண்ணங்கள்:

கூகுள் பிக்சல் ஸ்மார்போன்கள், கருப்பு, வெள்ளை, நீலம், சில்வர் போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு அதிக சேமிப்புக் கொண்ட பேட்டரி இந்த ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விலைப் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
Google Might Launch Pixel 3 and Pixel 3 XL in a New Mint Green Colour Option: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X