புதிய கூகிள் மேப்ஸ் அப்டேட் : இது நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும்.!

கூகுள் மேப்ஸில் பயணங்கள் மேற்கொள்ள விரும்பும் பயணர்க்ளுக்கு பயணிக்க சிறந்த நாளையும், சிறந்த நேரத்தையும் அறிவிக்கும் ஒரு புதிய அம்சத்தை சேர்க்கிறது.

|

கூகுள் மேப்ஸ் அதன் பயனர்களுக்கு முடிந்தவரை மிகச்சிறந்த பாதையை அமைத்து கொடுத்து அவர்களது இலக்கை அடைவதற்கு உதவுகிறது. இப்போது கூகுள் எனும் மாபெரும் தேடல்பொறி நிறுவனம், அதன் கூகுள் மேப்ஸில் பயணங்கள் மேற்கொள்ள விரும்பும் பயணர்க்ளுக்கு பயணிக்க சிறந்த நாளையும், சிறந்த நேரத்தையும் அறிவிக்கும் ஒரு புதிய அம்சத்தை சேர்க்கிறது.

புதிய கூகிள் மேப்ஸ் அப்டேட் : இது நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும்.!

வழக்கமாக கூகுள் அதன் புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த குறிப்பிட்ட அம்சம் ஏற்கனவே பரவலாக கிடைக்கிறது, ஆனால், இந்த கூகுள் மேப்ஸ் அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. கூகுள் மேப்ஸில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கு சார்ந்த தேடலை நிகழ்த்தும் போது இந்த புதிய அம்சமானது, அந்த நாள் மற்றும் நேரத்தை பொறுத்து உங்கள் பயணத்தின் கால அளவைக் குறிக்கும் ஒரு தகவல் வரைபடத்தைக் காண்பிக்கும்.

ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த அம்சம், குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் பயணத்தைத் தொடங்குவதன் மூலம் சேமிக்கப்படும் நேரம் சார்ந்த துல்லியமான தரவை வழங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய இணைப்பு மூலம், பயனர்கள் ஓரளவிற்கு தங்கள் இலக்கை நோக்கி பயணிப்பதற்கான சிறந்த நேரத்தைப் பற்றிய ஒரு கடினமான யோசனை பெற முடியும் மற்றும் அதன்படி அந்த அனைத்தையும் சரியாக திட்டமிட்டு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பயணத்தைத் துவங்குவதின் மூலம், சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் போதும் அது இன்னும் அதிகமான, துல்லியமான யோசனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுகையில் இந்த அம்சம் உங்களின் டிராவல் பார்ட்னர் போல செயல்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யாராவது சந்திக்க வேண்டும் என்ற பட்சத்தில் இது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்றே தோன்றுகிறது.

மேலும் சமீபத்தில், கூகுள் நிறுவனம் வாகனங்களின் வேக வரம்புகளை அறிவிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவொரு பயனுள்ள அப்டேட் ஆக இருந்தாலும், கூகுள் மேப்ஸில் வேக வரம்பு அம்சம் தற்போது இரண்டு பகுதிகளில் மட்டுமே உள்ளது. அதாவது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் மட்டுமே உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Maps Now Tells You the Best Time of the Day to Travel to Your Destination. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X