கூகுள் போனே வாங்கலாம்: கூகுள் பிக்சல் 4ஏ இந்தியாவில் அறிமுகம்- சலுகை விலையில் விற்பனை!

|

கூகுள் பிக்சல் 4ஏ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 4 ஏ அறிமுகத்தோடு அதன் விலை நிர்ணயம் மற்றும் விற்பனை தேதி வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 4ஏ

கூகுள் பிக்சல் 4ஏ

கூகுள் பிக்சல் 4ஏ., 3ஏ ஸ்மார்ட்போனின் வாரிசாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிறபகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வராத பிக்சல் 4 மாடலை போன்று உள்ளது என கூறப்படுகிறது.

பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே

பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே

கூகுள் பிக்சல் 4 ஏ பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, பின்புறத்தில் சதுர வடிவ கேமரா வடிவமைப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது. கூகுள் பிக்சல் 4 ஏ ஸ்மார்ட்போனானது ஒரே வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கொண்டுள்ளது.

சலுகை விலையில் விற்பனை

சலுகை விலையில் விற்பனை

கூகுள் பிக்சல் 4ஏ குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு அறிமுக சலுகையாக ரூ.29,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 16 முதல் பிளிப்கார்ட் மூலமாக விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஓஸ்

ஆண்ட்ராய்டு 10 ஓஸ்

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 ஓஸ் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மேம்படுத்தக்கூடிய அம்சமும் உள்ளது. இதன் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில் 5.81 இன்ச் அளவு, முழு ஹெச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஏர்டெல் குறைந்த விலை திட்டத்திலும் இந்த சலுகை இருக்கா?- உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்!

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் கேமரா அம்சம்

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் கேமரா அம்சம்

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 12 எம்பி பின்புற கேமரா எஃப்1.7 லென்ஸ் உடன் வருகிறது. செல்பி கேமராவிற்கென முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை

128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், 4ஜி வோல்ட் இ, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட விருப்பங்கள் இந்த கூகுள் பிக்சல் 4ஏ பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Launches its Google Pixel 4A Smartphone in India: Here the Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X