Home
Mobile

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை இந்தியாவில் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டார்

ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களை சொன்ன மாதிரியே 3 மாதங்களில் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். சென்னையை சேர்ந்தவரும் கூகுள் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சுந்தர் பிச்சை ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டார். ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்கள் உலக சந்தையிலேயே இந்தியாவில் மட்டும் தான் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

#1

#1

கூகுள் நிறுவனம் பட்ஜெட் வகைகளை தேர்ந்தெடுத்தது பெரிய விஷம், ஆன்டிராய்டு ஓன் போன்களை குறைந்த விலையில் விறப்தன் மூலம் இந்திய சந்தையை எளிதில் ஆக்கிரமிக்க முடியும்.

#2

#2

முதலில் கூகுள் சேவைகள் ஆன்டிராய்டில் வேலை செய்யாமல் இருந்தது, ஆன்டிராய்டு ஓன் ஓஎஸ் மூலம் இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்பலாம்.

#3

#3

ஆன்டிராய்டு ஓன் வரவு மூலம் பல சேவைகளை நீங்கள் பெற முடியும், முதல் நாளில் இருந்து இணைந்திருங்கள்.

#4

#4

குறைந்த விலை என்பதால் குறைத்து மதிப்பிடாதீர்கள், மற்ற ஸ்மார்ட் போன்களை போன்றே நிறைவான அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 5 எம்பி கேமரா மற்றும் 4.5 இன்ச் டிஸ்ப்ளேவை சொல்லலாம்.

#5

#5

புதிய ஆன்டிராய்டின் நோக்கம் முதலில் அனைவருக்கும் ஆன்டிராய்டை கொண்டு சேர்ப்பது மற்றும் அவர்களை பேஸ்புக்கின் முழு அம்சங்களையும் உபயோகிக்க வைப்பதாக இருக்கும்.

முதல் ஆன்டிராய்டு ஓன் வகைகளை கொண்டு வெளியாகும் ஸ்மார்ட் போன்கள் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1, ஸ்பைஸ் ட்ரீம் யூனோ மற்றும் கார்பன் ஸ்பார்க்கிள் 5, இந்த ஸ்மார்ட் போன்கள் ரூ.6000 முதல் 7000 என விலை நிர்னயக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் சிம், ஆன்டிராய்டு 4.4 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. ஹார்டுவேரை பொருத்த வரை குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர், 1 ஜிபி ராம், 4 ஜிபி மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி உள்ளது.

கூகுள் பல தொலைபேசி நிறுவனங்களுடன் விசேஷ சலுகைகளை அளிக்க ஒப்பந்தமிட்டுள்ளது. அந்த வகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 200 எம்பிக்கான அப்ளிகேஷன்களை 6 மாத காலத்திற்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

எல்லா நிறுவனங்களும் இணையதள விற்பனை முடுக்கிவிட ஆரம்பித்துவிட்டன, ஸ்பைஸ் மொபைல்களை ப்ளிப்கார்ட்டிலும், கார்பன் மொபைல்களை அமேசானிலும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன்களை ஸ்னாப்டீல் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

இந்த அறிமுக விழாவில் கூகுளின் மூத்த துணை தலைவர் சுந்தர் பிச்சை ஆன்டிராய்டு ஓன் போன்களின் அடுத்த முகவர்களை அறிவித்தார், அதன்படி ஏசர், ஆல்காடெல், ஏசஸ், எஹ்டிசி, இன்டெக்ஸ், லாவா, லெனோவோ, பானாசோனிக் மற்றும் சோலோ நிறுவனங்கள் ஆன்டிராய்டு ஓன் போன்களை விரைவில் விற்பனை செய்யும் என்று அவர் தெரிநித்தார்.

ஆன்டிராய்டு ஓன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X