இனி ஆண்ட்ராய்டு மொபைலில் உங்களது கம்பியூட்டர்...!

Written By:

இன்றைக்கு நம் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பிரவுசர் எது என்றால் அது கூகுள் குரோம் தாங்க.

கடந்த 2011ல் கூகுள் ரிமோட் டெஸ்க்டாப்(Remote Desktop) என்ற ஒன்றை மொபைலில் அறிமுகப்படுத்தியது ஆனால், இது அதிகமாக இன்றுவரை பயன்படுத்தபடாமல் இருந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கூகுள் இன்று அதற்கான ஆண்ட்ராய்டு ஆப்(Android app) ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள்.

இதில் கூகுள் குரோமை நீங்கள் உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தலாம், அதுதான் நான் ஆல்ரெடி யூஸ் பண்ணிட்டு தானே இருக்கேன் இதுல என்ன புதுசு? அப்படின்னு நீங்க கேக்கலாம்.

இனி ஆண்ட்ராய்டு மொபைலில் உங்களது கம்பியூட்டர்...!

அதாவது இந்த ரிமோட் டெஸ்க்டாப்(Remote Desktop) என்பது உங்கள் கம்பியுட்டரை உங்களது மொபைலுடன் இணைத்து கொள்ளலாம்.

இதன்மூலம் உங்களது கம்பியூட்டர் செயல்பாடுகளை உங்களது மொபைலில் இருந்தே நீங்கள் செய்யலாம் அதாவது கம்பியூட்டரில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் நீங்கள் உங்களது மொபைலில் இருந்தே இதில் செய்யலாம்.

இதோ அந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸை பெற இங்கு கிளிக் செய்யவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot