அறிமுகம்: கூகுள் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கர் (விலை & அம்சங்கள்).!
கூகிள் ஹோம் மினி விலை 49 டாலராக (சுமார் ரூ. 3,200) விலைக்கு விற்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல் அக்டோபர் 19 ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் இப்போது பல்வேறு கேஜெட்களை அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள், பிக்சல்புக் லேப்டாப், ஹெட்செட் மற்றும் அந்த வரிசையில் ஹோம் மினி மற்றும் கூகுள் ஹோம் மேக்ஸ் என்ற புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்கள் இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது, அதற்க்கு முன் இப்போது முன்பதிவு தொடங்கியுள்ளது, மேலும் பல்வேறு சிறந்த தொழில்நுட்ப வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கூகிள் ஹோம் மினி:
கூகிள் ஹோம் மினி விலை 49 டாலராக (சுமார் ரூ. 3,200) விலைக்கு விற்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்
மாடல் அக்டோபர் 19 ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா :
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஸ்பீக்கர் மாடல்முதலில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோம் மேக்ஸ்:
கூகுள் ஹோம் மேக்ஸைப் பொறுத்தவரை, 399 டாலராக (சுமார் ரூ. 26,000) விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டிசம்பர் மாதத்தில் இந்த ஸ்பீக்கர் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோம் மேக்ஸ் சிறப்பு:
இது 4.5-அங்குல றழழகநசள கொண்டுள்ளது, மிகவும் மேம்பட்ட பாஸ் செயல்திறன் மற்றும் ஸ்மார்ட் சவுண்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது,
மேலும் ஸ்மார்ட்போன்ற அனைத்து ப்ளூடூத் சாதனங்களிலும் பயன்படும் வகையில் உள்ளது இந்த ஸ்பீக்கர் மாடல்.

ஆப்பிள்:
இந்த கூகிள் ஹோம் மினி மற்றும் ஹோம் மேக்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி என்ற ப்ளூடூத் ஸ்பீக்கர்மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ளது.


Click it and Unblock the Notifications