சூப்பர் சுந்தர் சார்.. Google இயர் எண்ட் சேல்.. ரூ.10000 தள்ளுபடி.. லேட்டஸ்ட் Pixel போன்கள் மீது ஆபர் மழை!
கூகுள் (Google) நிறுவனமானது இந்தியாவில் அதன் ஆண்டு இறுதி விற்பனையை அறிவித்துள்ளது. இதன்கீழ் கூகுள் பிக்சல் 10 சீரீஸ் (Pixel 10 Series) மற்றும் பிக்சல் 9 சீரீஸ் (Pixel 9 Series) ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பு மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.
அதாவது பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஆகிய லேட்டஸ்ட் மாடல்கள் மற்றும் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ போல்ட், பிக்சல் 9ஏ ஆகிய மாடல்களும் தற்போது ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன.

லேட்டஸ்ட் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல பிக்சல் வாட்ச் 3, பிக்சல் பட்ஸ் 2ஏ மற்றும் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 ஆகிய இதர கூகுள் தயாரிப்புகள் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது. கூகுளின் இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில வாரங்கள் நீடிக்கும். ஏற்கனவே நேரலையில் உள்ள இந்த விற்பனை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்சல் 10 சீரீஸ், பிக்சல் 9 சீரீஸ் மீதான ஆபர்கள்: கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை வாங்கும் போது HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் EMI பரிவர்த்தனைகளில் ரூ.7,000 உடனடி கேஷ்பேக்கை பெறலாம். இதேபோல பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஆகிய மாடல்களை HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளின் கீழ் வாங்கினால் ரூ.10,000 உடனடி கேஷ்பேக்கை பெறலாம்.
மேலும் வாங்குபவர்கள் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்தையும் பெறலாம். இதற்கிடையில், பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு மற்றும் பிக்சல் 9ஏ உள்ளிட்ட பிக்சல் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வாங்க கிடைக்கின்றன.
பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ரூ.58,399 க்கு வாங்க கிடைக்கிறது, இது அதன் அறிமுக விலையான ரூ.79,999 இலிருந்து மிகவும் மலிவாகும். இதேபோல், பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு மற்றும் பிக்சல் 9ஏ ஆகிய மாடல்கள் முறையே ரூ.1,72,999 மற்றும் ரூ.49,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
மற்ற பிக்சல் தயாரிப்புகள் மீதான ஆபர்கள்: கூகுள் பிக்சல் வாட்ச் 3 மாடலானது ரூ.22,915 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது அதன் விலை ரூ.5,000 குறைந்துள்ளது. இதற்கிடையில் பிக்சல் ப்ரோ 2 TWS மாடல் ஆனது ரூ.3,000 விலை குறைக்கப்பட்டு ரூ.22,900 க்கு பதிலாக ரூ.19,900 க்கு வாங்க கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டமை (Material You Expressive design system) வழங்குகிறது
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- வெப்ப மேலாண்மைக்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபைi, என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவு


Click it and Unblock the Notifications








