ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளத்தின் அதிகாரப்பூர்வமான பதிப்பு பெயர் வெளியானது.!
தம்ப்நெயில் ஆனது நோட்டிபிகேஷன் உடன் பேட் (மங்கும்) திறன் கொண்டிருக்கும்.
கூகுள் நிறுவனத்தின் மூன்றாம் டெவலப்பர் முன்னோட்டமான ஆண்ட்ராய்டு ஓ என்பது சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பு 8.0 என அறியப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்ட் போலீஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, சமீபத்திய டெவெலப்பர் முன்னோட்டமானது ரிச் மீடியா அறிவிப்புகளை வழங்கும் நோக்கில் வண்ண குறியீட்டுடன் புதிய அம்சங்களை வழங்குகின்றது, அதாவது பயனர்கள் ஆல்பம் ஆர்ட் அல்லது வீடியோ தம்ப்நெயிலை அடிப்படையாகக் கொண்டு தீம் கிடைக்கும்.
கூடுதலாக, தம்ப்நெயில் ஆனது நோட்டிபிகேஷன் உடன் பேட் (மங்கும்) திறன் கொண்டிருக்கும். அதாவது கூகுள் பிளே ம்யூசிக், ஸ்பாட்டிபை மற்றும் யூட்யூப் ம்யூசிக் போன்ற இசை பயன்பாடுகள் மற்றும் வீடியோ பின்புலத்தில் இயங்க நோட்டட்டிபிகேஷன்கள் மங்கும்.
கூகுள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஓ பீட்டாவை அதன் நெக்சஸ் 5எக்ஸ், 6பி, நெக்சஸ் பிளேயர், பிக்சல் சி, பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் உள்ளிட்ட தகுதியான பிக்சல் மற்றும் நெக்ஸஸ் சாதனங்களில் வெளியிட்டுள்ளது. இதன் கீழ் நீங்கள் தேர்வுசெய்யும் சாதனங்கள் ஆண்ட்ராய்டு ஓ சமீபத்திய பீட்டா பதிப்பின் ஓவர் தி ஏர் (OTA) புதுப்பிப்பை பெறலாம்.
சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளத்தின் சில முக்கிய அம்சங்களை நினைவுபடுத்தினால் இது பரவலாக 'திப்ளூயிட் எக்ஸ்பீரியன்ஸ்' மற்றும் 'ஆண்ட்ராய்டு விடல்ஸ்' என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படலாம்.
'திப்ளூயிட் எக்ஸ்பீரியன்ஸ்' அனைத்து சுவாரஸ்யமான அம்சங்களையும் வழங்குகிறது, இது ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை நிர்வகிக்க கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சர் இந்த பிக்சர் மோட் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு உரை செய்தியை அனுப்பும் போது அல்லது ஒரு மின்னஞ்சல் எழுதும்போது ஒரு யூட்யூப் வீடியோவையும் மினிமைஸ் செய்யலாம்.
நோட்டிபிகேஷன் டாட்ஸ் என்ற சுவாரஸ்யமான அம்சத்தின் கீழ், அறிவிப்புகளுக்கான சிறிய அரட்டை தலைப்புகள் வெளியாகும். பயனர் இந்த நோட்டிபிகேஷன் டாட்டை லாங் பிரஸ் செய்ய நீங்கள் அறிவிப்பை முன்னோட்டமிடலாம். மேலும் அதை தள்ளுபடி செய்ய ஸ்வைப் செய்யலாம், முழு அறிவிப்பைப் பார்க்க கீழே இழுக்கலாம் அல்லது பயன்பாட்டைத் திறக்க சொல்லி டாப் செய்யலாம். இந்த டாட்ஸ் குறிப்பிட்ட ஐகானிலிருந்து வண்ணத்தை பிரித்தெடுக்கின்றன, வெவ்வேறு அறிவிப்புகளுக்கு இடையில் வேறுபாட்டை எளிதாக்குகின்றன.
இது தவிர, ஸ்மார்ட் டெக்ஸ்ட் தேர்வும் உள்ளது. இந்த அம்சத்தின் கீழ் முகவரிகள், யூஆர்எல்-கள், தொலைபேசி எண்கள், மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவைகளை ஆண்ட்ராய்டு அடையாளம் காணப்பழகி அவற்றை கட்-காப்பி -பேஸ்ட் செய்ய பழகும்.


Click it and Unblock the Notifications