Home
Mobile

ஆன்ட்ராய்டு போன்களில் 3ஜி வசதி: கூகுள், ரிலையன்ஸ் ஒப்பந்தம்

By Karthikeyan
ஆன்ட்ராய்டு போன்களில் 3ஜி வசதி: கூகுள், ரிலையன்ஸ் ஒப்பந்தம்

ஆன்ட்ராய்டு போன்களில் 3 ஜி இணைப்பு வசதிக்காக கூகுள் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

ரிலையன்ஸ் மற்றும் கூகுள் சேர்ந்து ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் 2 வருடங்கள் நீடிக்கும். அதன்படி வரும் இரண்டு வருடங்கள் இந்தியாவில் விற்கப்படும் பின்பக்கம் கூகுளின் முத்திரை பதித்த ஆன்ட்ராய்டு போன்கள் அனைத்தும் ரிலையன்சின் 3ஜி மொபைல் இணைப்பை பெற்று வரும்.

இந்த ரிலையன்ஸ் ஆன்ட்ராய்டு போன்களை போன்களை வாங்குவோர் ஒரு சிறப்பான சலுகை வழங்கப்படும். அதன் படி முதல் 6 மாதங்களுக்கு அவர்கள் 1ஜிபி அளவிற்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த இணைப்பை விரும்பாதவர்கள் இந்த ஆபர் இல்லாமல் மொபைலை மட்டும் தனியாக வாங்கிக் கொல்லலாம்.

இந்த சலுகையை மக்களுக்கு எடுத்தச் செல்வதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் கூகுள் தனித்தனியாக 30 கோடி அளிவிற்கு செலவிட உள்ளன. கூகுள் தனது ஆன்ட்ராய்டு மொபைல்களை பிரபலப்படுத்தவும், ரிலையன்ஸ் தனது தொலைத்தொடர்பு இணைப்பை பிரபலப்படுத்தவும் இந்த முயற்சியை மேற்கொள்கின்றன.

கடந்த காலங்களில் ஏற்கனவே கூகுள் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அதாவது ஆஸ்திரேலியாவில் டெல்ஸ்ட்ரா மற்றும் அமெரிக்காவில் வெரிசான் ஆகிய நிறுவனங்களோடு இந்த வேலையைச் செய்து வந்தது.

கூகுள் மற்றும் ரிலையன்சின் இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்குமே பெரிய வருமானத்தைக் கொண்டு வரும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக வரும் 2 வருடங்களுக்குள் ரிலையன்ஸ் 1 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களைப் பெறும் என நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X