Home
Mobile

Doom Scrolling-க்கு குட்பை.. Dumb Phone-க்கு ஜம்ப் அடிக்கும் மக்கள்.. இந்த 4 மாடல்களும் ஆர்டர் அள்ளுது!

என்ன தேடுறோம்.. எதை பார்க்குறோம்.. எதுக்காக செய்யுறோம்னு.. எந்த ஐடியாவும் இல்லாமல் 2, 3 மணி நேரம் போனதே தெரியாமல்.. தொடர்ச்சியாக ஸ்மார்ட்போனில் எதையாச்சும் ஸ்க்ரோல் செய்துகொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர்களை காப்பாற்றி, அதிலிருந்து விடுதலை அளிக்க வல்லுநர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ் - டம்ப் போன்கள் (Dumb Phones) தான்!

டம்ப் போன் என்றதும் குழப்பம் அடைய வேண்டாம். பீச்சர் மொபைல் போன்கள் (Feature Mobile Phones) தான். டம்ப் போன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் இவைகள் ஸ்மார்ட்போன்களுக்கான நம்பகமான, சிறிய மற்றும் கவனச்சிதறல் இல்லாத மாற்றாக பார்க்கப்படுகின்றன. ஒருவேளை நீங்கள் டூம் ஸ்க்ரோலிங்கில் இருந்து விடுபட விரும்பினால் இப்போதைக்கு மார்க்கெட்டில் 4 பெஸ்ட் டம்ப் போன்களின் பட்டியல் இதோ:

Doom Scrolling-க்கு குட்பை.. Dumb Phone-க்கு ஜம்ப் அடிக்கும் மக்கள்!

4. மோட்டோரோலா ஏ10இ டூயல் சிம் கீபேட் போன் (Motorola A10e Dual Sim keypad Phone): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இது ரூ.1,175 க்கு வாங்க கிடைக்கிறது. 1.8 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் இந்த மொபைல் போன் ஆனது 5 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும்.

3. லாவா ஏ2 ஸ்மார்ட் 2025 டூயல் சிம் கீபேட் மொபைல் போன் (Lava A2 Smart 2025 Dual SIM Keypad Mobile Phone): 2.4 இன்ச் டிஸ்பிளே, உள்ளமைக்கப்பட்ட யுபிஐ ஆதரவு, 1200mAh பேட்டரி, ப்ளூடூத் ஆகிய முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த மாடல் அமேசான் இந்தியா வழியாக ரூ.1,132 க்கு வாங்க கிடைக்கிறது.

2. ஐடெல் இட்5330 (itel it5330): 32 எம்பி ரேம், 32 எம்பி ரோம், மெமரியை 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு, 2.8 இன்ச் டிஸ்ப்ளே, 0.8எம்பி ரியர் கேமரா, யூனிசாக் சிப்செட் மற்றும் 1900mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த மொபைல் போன், பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.1,349 க்கு வாங்க கிடைக்கிறது.

1. எச்எம்டி டச் 4ஜி (HMD Touch 4G): மிகவும் சமீபத்தில் தான் எச்எம்டி டச் 4ஜி மொபைல் போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் எச்எம்டி டச் 4ஜி மாடலின் 64 ஜிபி ரேம் + 128 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.3,999 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கிறது.

விரிவான அம்சங்களை பொறுத்தவரை இது 2.5டி கவர் கிளாஸுடன் கூடிய 3.2 இன்ச் க்யூவிஜிஏ டச்-சப்போர்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி127 (Unisoc T127) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

டூயல் (நானோ) சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்டர்னல் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது. எச்எம்டி நிறுவனத்தின் இந்த சமீபத்திய 4ஜிபோன் ஆனது எஸ்30 பிளஸ் டச் அவுட் ஆஃப் தி பாக்ஸ் கொண்டு இயங்குகிறது.

கேமராவை பொறுத்தவரை எச்எம்டி டச் 4ஜி போன் ஆனது எல்இடி ஃபிளாஷ் யூனிட் (LED Flash Unit) உடனான 2 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சார் உடன் வருகிறது. அதே நேரத்தில் முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 0.3-மெகாபிக்சல் விஜிஏ சென்சார் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை எச்எம்டி டச் 4ஜி போன் ஆனது 2000mAh மாற்றக்கூடிய பேட்டரியை கொண்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஹைப்ரிட் போன் அளவீட்டில் 102.3×61.85×10.85மிமீ மற்றும் எடையில் 100 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Goodbye To Smartphone Doom Scrolling 4 Best Dumb Phones You Can Buy Now in India 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X