நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.. Apple-ன் 2026 ஸ்லிம் iPhone உறுதி.. எப்போது அறிமுகம்? என்ன மாடல்?
கடந்த ஆண்டு ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பாக ஐபோன் ஏர் (iPhone Air 2) மாடல் அறிமுகமாகி இருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அல்ட்ரா ஸ்லிம் ஐபோன் மாடலானது, அளவீட்டில் வெறும் 5.6 மிமீ மட்டுமே உள்ளது. ஆனால் அதன் விலைக்கு ஏற்ற சிறந்த அம்சங்களை வழங்கவில்லை. அதனால் சரியான வியாபாரமும் நடக்கவில்லை.
இதன் விளைவாக ஆப்பிள், 2026 இல்"அடுத்த" ஐபோன் ஏர் மாடலை அறிமுகப்படுத்தாமல் போகலாம் என்றும், 2026 க்கு பதிலாக இது 2027 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வந்தன. இருப்பினும் லீக்கர் ஃபிக்ஸட் ஃபோகஸ் டிஜிட்டல் வழியாக கிடைத்துள்ள ஒரு புதிய லீக், ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மாடல் இந்த ஆண்டு அறிமுகமாகும்; ஆனால் மிகச்சிறிய அளவிலான மேம்படுத்தல்களை மட்டுமே பெறும் என்று கூறுகிறது.

லீக்கர் ஃபிக்ஸட் ஃபோகஸ் டிஜிட்டலின் (Fixed Focus Digital) படி, ஆப்பிள் ஐபோன் ஏர் 2 மாடல் ஆனது இந்த இலையுதிர்காலத்தில் வெளியிடப்படும். இது ஐபோன் ஏர் 2 மாடலை எதிர்நோக்கும் எவருக்கும் ஒரு நல்ல செய்தியாக தோன்றினாலும், அவர்கள் ஏமாற்றம் அடையவும் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் ஐபோன் ஏர் 2 மாடலானது "சிறிய மாற்றங்கள், வழக்கமான மேம்படுத்தல் மற்றும் குறிப்பிடத்தக்க ஃபீச்சர் குறைப்புக்கள் இல்லாமல்" வெளியிடப்படும் என்று லீக்கர் கூறுகிறார். இதன் பொருள் - வரவிருக்கும் புதிய ஐபோன் ஏர் மாடலில் எந்த கடுமையான மாற்றத்தையும் நாம் காண முடியாது.
ஆப்பிள் ஐபோன் 17 ஏர் மாடலின் விரிவான அம்சங்கள்: பெயர் குறிப்பிடுவது போலவே ஐபோன் ஏர் என்பது ஆப்பிளின் அல்ட்ரா ஸ்லிம் (Ultra Slim) மாடல் ஆகும். கூடவே இசிம் ஒன்லி மாடலும் ஆகும். அதாவது இசிம் ஆதரவை (eSIM Support) மட்டுமே கொண்டிருக்கும்.
ஐபோன் ஏர் ஆனது இதுவரை வெளியானதிலேயே மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் மாடல் ஆகும், அளவீட்டில் இது வெறும் 5.6மிமீ மட்டுமே உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. மேலும் இது 80% மறுசுழற்சி செய்யப்பட்ட டைட்டானியம் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன் மற்றும் பின்புறத்தில் செராமிக் ஷீல்ட் 2 ப்ரொடெக்ஷனும் உள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.5 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை (Retina XDR OLED) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேயில் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion), 10-120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ஆகிய அம்சங்களுக்கான ஆதரவும் உள்ளன.
சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் ஏர் மாடல் ஆனது ஏ19 ப்ரோ சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களுக்கான ஆதரவுடனும் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை. ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் ப்ரைமரி கேமரா உள்ளது.
சிங்கிள் ரியர் கேமராவை கொண்டிருந்தாலும் கூட இது சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப்/1.6 அபெர்க்ஷர் மற்றும் 2எக்ஸ் டெலிஃபோட்டோ திறன்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை - இது "நாள் முழுவதும்" பேட்டரி லைஃப்பை வழங்குவதாகவும், ஒரே சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மெங்கும் 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.


Click it and Unblock the Notifications








