அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!

|

நோக்கியா மொபைல் (NOKIA Mobile) நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றை கேட்டு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்திய மொபைல் பிராண்டுகள் கூட கொஞ்சம் ஷாக் ஆகி இருக்கலாம்!

அதென்ன அறிவிப்பு? அதிர்ச்சியாகும் அளவிற்கு நோக்கியா அப்படி என்ன சொல்லியது? இதோ விவரங்கள்:

இதுதான் உண்மையான கம்பேக்!

இதுதான் உண்மையான கம்பேக்!

நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை - நோக்கியாவிற்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இருந்தாலும் கூட சீன ஸ்மார்ட்போன்களின் "படையெடுப்பால்" நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆனது இருக்கும் இடம் தெரியாமல் உள்ளன!

அந்த நிலை மாற வேண்டும் என்றால், நோக்கியா என்கிற பிராண்டுக்கு மக்களின் அன்பு மட்டும் போதாது; அவர்களின் நம்பிக்கையும் வேண்டும்! அதாவது நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மீது பணம் செலவழிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்!

அப்படியான நம்பிக்கையை (மீண்டும்) பெறும் நோக்கத்தின் கீழ், நோக்கியா நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பை நோக்கியாவின் உண்மையான கம்பேக் (Comeback) என்றே கூறலாம்!

வாங்குனா இந்த 3 Smart TV-ல ஒன்னு வாங்குங்க.. ஏன்னா இந்த 2022-ல் அதிகம் பேர் இதை தான் வாங்கி இருக்காங்க!வாங்குனா இந்த 3 Smart TV-ல ஒன்னு வாங்குங்க.. ஏன்னா இந்த 2022-ல் அதிகம் பேர் இதை தான் வாங்கி இருக்காங்க!

நோக்கியா கை காட்டிய 5 ஸ்மார்ட்போன்கள்!

நோக்கியா கை காட்டிய 5 ஸ்மார்ட்போன்கள்!

நோக்கியா நிறுவனம் அதன் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டு, அவைகள் அனைத்துமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை (Android 13 OS Update) பெறும் என்று அறிவித்துள்ளது.

நோக்கியாவின் இந்த அறிவிப்பானது, லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டின் கீழ் அணுக கிடைக்கும் அம்சங்களை அனுபவிக்க விரும்பும் நோக்கியா ரசிகர்களுக்கான ஒரு குட் நியூஸ் ஆகும். கூடவே சீன நிறுவனங்களுக்கான ஒரு பேட் நியூஸும் ஆகும்!

இது எப்படி சீன நிறுவனங்களுக்கு பேட் நியூஸாக மாறும்?

இது எப்படி சீன நிறுவனங்களுக்கு பேட் நியூஸாக மாறும்?

நோக்கியாவின் இந்த அறிவிப்பு, நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களின் மீதான மதிப்பை அதிகரிக்கும்.

ஏனென்றால் (இஷ்டத்திற்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட) ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான கஸ்டம் ஸ்கின்களை வழங்கும் சீன ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது நோக்கியா வழங்கும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் ஆனது, தன் பயனர்களுக்கு நியர்-ஸ்டாக் எக்ஸ்பீரியன்ஸை (Near stock experience) வழங்கும்.

இதன் விளைவாக, நோக்கியா குறிப்பிட்டுள்ள 5 ஸ்மார்ட்போன்களின் விற்பனை தானாக அதிகரிக்கும்! இது நிச்சயம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஒரு பேட் நியூஸ் ஆகும்!

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டிற்கு தகுதியான 5 நோக்கியா போன்களின் பட்டியல் இதோ:

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டிற்கு தகுதியான 5 நோக்கியா போன்களின் பட்டியல் இதோ:

01. நோக்கியா எக்ஸ்ஆர்20 (NOKIA XR20)
02. நோக்கியா எக்ஸ்20 (NOKIA X20)
03. நோக்கியா எக்ஸ்10 (NOKIA X10)
04. நோக்கியா ஜி50 (NOKIA G50)
05. நோக்கியா ஜி11 பிளஸ் (NOKIA G11 Plus)

இந்த பட்டியலில் மேலும் 3 போன்கள் சேரும்!

இந்த பட்டியலில் மேலும் 3 போன்கள் சேரும்!

நோக்கியா நிறுவனத்தால் பட்டியலிடப்பட்ட 5 ஸ்மார்ட்போன்களை தவிர்த்து நோக்கியா சி31 (NOKIA C31), நோக்கியா ஜி60 5ஜி (NOKIA G60 5G) மற்றும் நோக்கியா எக்ஸ்30 5ஜி (NOKIA X30 5G) போன்ற ஸ்மார்ட்போன்களும் கூட ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட 3 ஸ்மார்ட்போன்களும் நோக்கியா மொபைல் வெளியிட்ட பட்டியலில் இடம்பெறாமல் போனதற்கு காரணம் - அவைகள் இன்னும் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால் தான்; அதாவது, பட்டியலில் நாம் பார்த்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆனது சீனாவில் மட்டுமே ஓஎஸ் அப்டேட்டை பெறவுள்ளன. அதே அப்டேட், இந்தியாவிற்கு எப்போது வரும் என்கிற சரியான தகவல்கள் எதுவும் இல்லை!

Best Mobiles in India

English summary
Good News From NOKIA These 5 Phones Will Get Android 13 OS Update And Will Offer Near Stock Experience

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X