சபாஷ் சரியான அறிவிப்பு: உற்சாகத்தில் Motorola ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்! அப்படி என்ன நடந்தது?

|

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அதுவும் தற்போது 5ஜி போன்களை அறிமுகம் செய்கிறது இந்நிறுவனம். குறிப்பாக இந்தியாவில் சியோமி, விவோ போன்களை போன்று இந்த மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதங்களில் சில மோட்டோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் எனப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் பெறும் மேலும் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் பல்வேறு புதிய அம்சங்களை இந்த அப்டேட் மூலம் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பயனர்கள் பெறமுடியும். குறிப்பாக இந்த அறிவிப்பு மோட்டோரோலா பயனர்களை உற்சாகமடையச் செய்துள்ளது என்றே கூறலாம்.

சபாஷ் சரியான அறிவிப்பு! உற்சாகத்தில் Motorola  ஸ்மார்ட்போன் பயனர்கள்.!

அதேபோல் தற்போது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் ஆண்ட்ராய்டு 13 ஓஸ் அப்டேட் பட்டியலில் உள்ள அனைத்து போன்களுக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது புதிய ஓஎஸ் அப்டேட் பெறப் போகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா ரேசர் (2022), மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா, மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ,மோட்டோரோலா எட்ஜ்+ (2022),மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன், மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ, மோட்டோரோலா எட்ஜ் 30, மோட்டோரோலா எட்ஜ் (2022), மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ, மோட்டோரோலா எட்ஜ் 20, மோட்டோரோலா எட்ஜ் ( 2021), மோட்டோரோலா எட்ஜ் 20 லைட், மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2022), மோட்டோ ஜி 5ஜி, மோட்டோ ஜி82 5ஜி, மோட்டோ ஜி72, மோட்டோ ஜி62 5ஜி, மோட்டோ ஜி52, மோட்டோ ஜி42, மோட்டோ ஜி32 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்த புதிய OnePlus ஸ்மார்ட் டிவி: எவ்வளவு நாள் இந்த சலுகை இருக்கும்?தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்த புதிய OnePlus ஸ்மார்ட் டிவி: எவ்வளவு நாள் இந்த சலுகை இருக்கும்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் மூலம் புதிய மெட்டீரியல் தீம், வால்பேப்பருக்கு ஏற்றவாறு தனித்துவமான தீமிங் ஐகான்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பெறமுடியும். இதுதவிர மென்மையான அனிமேஷன்கள் இந்த புதிய அப்டேட் மூலம் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுவந்துள்ளது இந்த புதிய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பயனர்களுக்குப் பல கூடுதல் அம்சங்களை கொடுக்கும் இந்த ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட். அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் வரும் டிசம்பர் 15-ம் தேதி புதிய மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. விரைவில் மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா: Flipkart ஆபர்: பாதி விலையில் 42-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்.!ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா: Flipkart ஆபர்: பாதி விலையில் 42-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்.!

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் வெளிவரும். 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 4450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல சென்சார் வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Good News From Motorola these 10 phones will get Android 13 os update: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X