Home
Mobile

இத எதிர்பார்க்கல.. iPhone 15, OnePlus 12-க்கு செக் வைத்த Samsung.. புதிய Galaxy S24 சீரிஸின் விலை அப்படி!

ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட ஐபோன் 15 சீரீஸ், 2024 ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்தியாவிற்கு வரும் ஒன்பிளஸ் 12, அதே மாதத்தில் அறிமுகமாகும் விவோ எக்ஸ்100 சீரீஸ்.. என எல்லா ஸ்மார்ட்போன்களுக்குமே வேட்டு வைக்க வேண்டுமென்று சாம்சங் நிறுவனம் முடிவெடுத்து விட்டதுபோல!

சந்தேகத்திற்கு இடமின்றி மேற்கண்ட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்குமே சாம்சங்கின் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடும்போட்டியாக இருக்கும். இதற்கிடையில் எஸ்24 சீரிஸின் விலை நிர்ணயம் பற்றிய சுவாரசியமான தகவலொன்று வெளியாகியுள்ளது. அதென்ன தகவல்? எஸ்24 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

Samsung Galaxy S24 சீரிஸ் விலை நிர்ணயத்தில் பெரிய டிவிஸ்டு!

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? சாம்சங்கின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு வெளியீட்டு நிகழ்வில் (உலகளவில்) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸின்கீழ் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? இந்த சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.

Samsung Galaxy S24 சீரிஸ் விலை நிர்ணயத்தில் பெரிய டிவிஸ்டு!

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? எஸ்24 சீரீஸின் சாத்தியமான விலை விவரங்களை வெளிப்படுத்தும் ஒரு புதிய அறிக்கை ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதில் சரியான விலை விவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் சாம்சங் நிறுவனம் புதிய எஸ்24 சீரிஸை பழைய எஸ்23 சீரிஸின் விலையிலேயே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

அதாவது ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 சீரிஸில் கையாண்ட அதே பாணியை சாம்சங் அதன் எஸ்24 சீரீஸில் கையாள உள்ளது போல தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்23 மாடலின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.74,999 க்கு அறிமுகமானது.

Samsung Galaxy S24 சீரிஸ் விலை நிர்ணயத்தில் பெரிய டிவிஸ்டு!

இதே போன்ற விலைக்கு கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமானால் ஐபோன் 15-க்கும், ஒன்பிளஸ் 12-க்கும் கண்டிப்பாக பெரிய சிக்கல் காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம். ஏனென்றால் ஐபோன் 15-ன் பேஸிக் வேரியண்ட் ரூ.78,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12 ரூ.60,000 - ரூ.70,000 க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்23 பிளஸின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.94,999 க்கும் மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கும் அறிமுகமானது. வெளியான ஆன்லைன் அறிக்கை உண்மையாகும் பட்சத்தில், கேலக்ஸி எஸ்24 சீரிஸின் விலை நிர்ணயமும்கூட இதேபோல தான் இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸில் சாட்டிலைட் டெக்ஸ்ட்டிங் அம்சம் (Satellite texting feature) கொண்டு வரப்படலாம். இது செயற்கைக்கோள் இணைப்பு வழியாக அவசர குறுஞ்செய்தியை அனுப்ப உதவும் ஒரு அம்சமாகும். இதே அம்சம் ஐபோன் 14 ப்ரோ சீரிஸில் உள்ளதென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் QHD+ டைனமிக் AMOLED LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். ஃபிரேம் டிபார்ட்மெண்டில் ஒரு புதிரான அப்கிரேட் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது; இது கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவில் காணப்பட்ட அலுமினிய ஃபிரேமில் இருந்து மிகவும் வலுவான டைட்டானியம் ஃபிரேமுக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 200எம்பி மெயின் கேமரா + 12எம்பி சென்சார் + 50எம்பி சென்சார் + 10எம்பி சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப், 12எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன் யுஐ 6 ஓஎஸ், 45W சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டிருக்கலாம்.

Photo Credit: David Martin

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For Samsung Customers Waiting For Galaxy S24 Series No Price Hike
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X