Home
Mobile

அதே அதே.. செம்ம குஷியில் Samsung ரசிகர்கள்.. Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 விலைகள் லீக் ஆனது!

சமீபத்தில் அறிமுகமான கேலக்ஸி எஸ்25 சீரீஸ் (Samsung Galaxy S25 Series) ஸ்மார்ட்போன்களை விட, அடுத்து வரும் இந்த 2 சாம்சங் போன்களுக்கு தான் மவுசு அதிகம். அவைகள் - சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7) மாடல்கள் ஆகும்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வண்ணம், இவைகள் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களை என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எப்போது அறிமுகமாகும்? இதோடு சேர்த்து வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:

அதே அதே.. Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 விலைகள் லீக் ஆனது!

கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்கள் என்ன விலைக்கு வரும்? நம்பத்தகுந்த ஆதாரங்களில் ஒன்றான @PandaFlashPro வழியாக கிடைத்துள்ள தகவலின்படி கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்களின் விலையானது கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி இஸட் போல்ட் 6 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 6 உடன் ஒற்றுப்போகும்.

அதாவது பெரும்பாலான சந்தைகளில், கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 மாடல்கள் ஆனது கடந்த ஆண்டு வெளியான மாடல்களின் விலைகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் கேலக்ஸி இஸட் போல்ட் 7 ஆனது ரூ.1,64,999 க்கும் மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஆனது ரோ.1,09,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இரண்டுமே எக்ஸினோஸ் 2500 சிப்செட் உடன் வரலாம். கேலக்ஸி இஸட் பிளிப் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ மாடல்கள் 8-இன்ச் இன்டர்னல் ஸ்கிரீன் மற்றும் 6.5-இன்ச் கவர் டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.

எப்போது அறிமுகமாகும்? இதனுடன் வேறு என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம்? பல ஆண்டுகளாக, சாம்சங் நிறுவனமானது ஜூலை மாதத்தில் தான் தனது லேட்டஸ்ட் போல்டபிள்களை அறிமுகம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆக 2025 ஆம் ஆண்டிலும் நாம் இதை லான்ச் டைம்லைனை எதிர்பார்க்கலாம். 2025 ஜூலை அல்லது ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

சுவாரசியமாக இந்த 2025 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் மொத்தம் 4 போல்டபிள் போன்களை அறிமுகம் செய்யலாம். கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 உடன் சேர்த்து கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ (Galaxy Z Flip 7 FE) மற்றும் சாம்சங்கின் முதல் ட்ரிபிள் போல்டபிள் போனும் (Samsung Triple foldable phone) சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,29,999
12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,41,999
12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,65,999

புதிதாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்25,எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.80,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999
12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,11,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For Samsung and Foldable Phone Fans Galaxy Z Fold 7 Flip 7 May Not Get Price Increase
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X