Home
Mobile

சூப்பர் சான்ஸ்.. முழுசா ரூ.20,000 விலை குறைப்பு.. ஆர்டர்களை அள்ளும் OPPO-வின் டபுள் டிஸ்பிளே போன்!

பீச்சர் மொபைல் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு அப்கிரேட் ஆக நாம் அனைவரும் அதிக ஆண்டுகள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால்.. ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் (Foldable Smartphone) என்று அழைக்கப்படும் மடங்கக்கூடிய டிஸ்பிளேக்களை கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு அவ்வளவு வேகமாக நாம் இடம்பெயர மாட்டோம் என்றாலும் கூட.. குறிப்பிட்ட சதவிகித பயனர்கள் ஏற்கனவே ஃபோல்டபிள் போன்களுக்கு அப்கிரேட் ஆக தொடங்கி விட்டனர். இதன் விளைவாகவே இந்தியாவில் பல நிறுவனங்கள் தத்தம் ஃபோல்டபிள் போன்களை அறிமுகம் செய்தன; இன்னும் பல மாடல்கள் அறிமுகம் செய்யப்பட காத்திருக்கின்றன.

சாம்சங் மற்றும் மோட்டோரோலா ஆகிய 2 நிறுவனங்களும் கடந்த பல ஆண்டுகளாகவே தத்தம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை மற்றும் ஃபிளிப் போன்களையும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே ஒப்போ, ஒன்பிளஸ்.. அவ்வளவு ஏன் கூகுள் நிறுவனமும் கூட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன.

ரூ.20,000 விலை குறைப்பு.. ஆர்டர்களை அள்ளும் OPPO போன்!

இதில் ஒன்பிளஸ் மற்றும் கூகுள் ஆகிய இரண்டும் முறையே 1 போன்களை.. அதாவது முதல் ஃபோல்டபிள் போன்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ளனர். ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் ஓப்பன் அறிமுகமானது; கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக பிக்சல் ஃபோல்ட் அறிமுகமானது.

ஒருவேளை உங்களுக்கு ஒன்பிளஸ் மற்றும் கூகுளின் முதல் ஃபோல்டபிள் மாடல்களை வாங்குவதில் விருப்பம் இல்லையென்றால்.. ஒப்போவின் லேட்டஸ்ட் ஃ போல்டபிள் ஸ்மார்ட்போனான ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Oppo Find N3 Flip) மாடலை கருத்தில் கொள்ளலாம். சுவாரசியமாக தற்போது இந்த ஸ்மாட்போனின் மீது நல்ல விலைக்குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போன் அணை கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.94,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது. தற்போது ரூ.20,000 என்கிற விலைக்குறைப்புக்குப் பிறகு ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலைகுறைப்பு ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனின் 2 கலர் ஆப்ஷன்கள் (கிரீம் கோல்ட் மற்றும் ஸ்லீக் பிளாக்) மீதும் அணுக கிடைக்கிறது.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனின் விரிவான அம்சங்கள்: இது 1080 x 2520 பிக்சல்ஸ், 1ஹெர்ட்ஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.8-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ அமோஎல்இடி இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் 382 x 720 பிக்சல்ஸ், 900 நிட்ஸ் பீட்ஸ் பிரைட்னஸ் உடனான 3.26-இன்ச் அமோஎல்இடி கவர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆர்ம் இம்மார்ட்டல்ஸ்-ஜி715 எம்சி11 ஜிபியு உடன் மற்றும் 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 (MediaTek Dimensity 9200) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதில் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 48-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளன.,

செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனில் உள்ள சோனி ஐஎம்எக்ஸ்709 ஆர்ஜிபிடபுள்யூ சென்சார் மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமரா பார்த்துக்கொள்ளும். இந்த கேமரா ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் ஆதரவு உடனான டூயல் ஸ்பீக்கர்ஸும் உள்ளது

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ப்ளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட்சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 44W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,300எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. எடையை பொறுத்தவரை, இது 198 கிராம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Good Chance to Buy Foldable Phone At Low Cost Rs 20000 Massive Price Cut on Oppo Find N3 Flip Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X