Home
Mobile

வந்துட்டான்.. இனி 6000mAh லாம் அவுட்.. 7500mAh பேட்டரி, 100W சார்ஜிங், 2K டிஸ்பிளே.. புதிய iQOO 5ஜி போன்!

மொபைல் போன் சந்தையில் உள்ள 5000mAh மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் நோக்கத்துடன் ஐக்யூ (iQOO) நிறுவனம் ஆனது 7500mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை (7500mAh Battery Phone) அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி உள்ளது.

அது ஐக்யூ நியோ 11 5ஜி (iQOO Neo 11 5G) ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் சீன அறிமுகம் மிக விரைவில் நடக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் ஆனது சீன சந்தையை தொடர்ந்து இந்திய சந்தைக்கும் வந்தது. ஐக்யூவின் அடுத்த போஸ்டர் அறிமுக தேதியை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7500mAh பேட்டரி, 100W சார்ஜிங், 2K டிஸ்பிளே.. புதிய iQOO 5ஜி போன்!

ஐக்யூ நியோ 11 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது. இது 100W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 7500mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 2கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட்டும் இருக்கலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 6 உடன் அனுப்பப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனில் ஓஐஎஸ் (OIS) உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரைமரி சென்சாருடன் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் டெப்த் சென்சாரும் இருக்கலாம். அதாவது இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரலாம்.

ஐக்யூ நியோ 11 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஸ்மார்ட்ப்ரைஸ் வலைத்தளத்தின்படி இது ரூ.34,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஐக்யூ 15 எப்போது அறிமுகமாகும்? ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 2025 நவம்பர் நடுப்பகுதியிலோ அல்லது பிற்பகுதியிலோ அறிமுகம் செய்யப்படலாம். ஆக இந்தியாவில் - ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனை தொடர்ந்து, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி-ஐ பயன்படுத்தும் இரண்டாவது போனாக ஐக்யூ 15 அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.60,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது இது - இந்தியாவில் ரூ.54,999 க்கு அறிமுகமான ஐக்யூ 13 (iQOO 13) மாடலை விட ஒரு சிறிய விலை உயர்வை மட்டுமே சந்திக்கும்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.85-இன்ச் 2K பிளாட் LTPO AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP ப்ரைமரி கேமரா (1/1.56" சென்சார்)
- 50MP அல்ட்ரா-வைட் கேமரா
- 50MP 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 0MP செல்பீ கேமரா
- 100W வயர்டு சார்ஜிங் உடனான 7000mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68/IP69 ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Good Bye to 6000mAh Phones iQOO Neo 11 Launching Soon With 7500mAh Battery Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X