அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாஸ்: உலகளவில் வெளியாகும் ஹானர் 50 லைட், ஹானர் 50- இப்படியும் இருக்கலாம்!

|

ஹானர் ஸ்மார்ட்போன் வெளியீடுகள் என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஹானர் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு தொடர்ந்து 5ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.ஹானர் நிறுவனத்தின் சமீபத்திய சாதனமாக ஹானர் 50 சீரிஸ் இருக்கிறது. இதில் ப்ரீமியம் மிட் ரேஞ்ச் ஹார்ட்வேர் நிரம்பிய இரண்டு வெவ்வேறு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. நிறுவனம் முன்னதாகவே இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீனாவில் இந்த வரிசையை நிறுவனம் கொண்டு வந்தது. ஹானர் 50 ப்ரோ மற்றும் ஹானர் 50 எஸ்இ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஹானர் 50 லைட்டுக்கு பதிலாக நிலையான மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹானர் 50 லைட் ஸ்மார்ட்போன்

ஹானர் 50 லைட் ஸ்மார்ட்போன்

ஹானர் 50 லைட் ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வெண்ணிலா மாடலை விட சற்று உயர் ரகமாக இருக்கிறது. ஹானர் 50 ஸ்மார்ட்போனானது எல்சிடி-க்கு பதிலாக ஓஎல்இடி பேனல் உடன் வருகிறது. ஹானர் 50 லைட் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 1080 x 2376 பிக்சல்கள் FHD+ தெளிவுத்திறன் வழங்குகிறது.

ஸ்னாப்டிராகன் 662ஜி செயலி ஆதரவு

ஸ்னாப்டிராகன் 662ஜி செயலி ஆதரவு

ஹானர் 50 லைட் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 662ஜி செயலியை பயன்படுத்துகிறது. இந்த ஹானர் 50 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி செயலி மூலம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றஉம் மேஜிக் யுஐ 4.2 மூலம் இயக்கப்படுகிறது.

பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புகள்

பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புகள்

ஹானர் 50 லைட் சாதனத்தின் பின்புறத்தில் குவாட் கேமராக்களை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனில் 64 எம்பி முதன்மை கேமராவை கொண்டிருக்கிறது. அதோடு 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. வெண்ணிலா ஹானர் 50 ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

ஹானர் 50 லைட் ஸ்மார்ட்போனானது பாதுகாப்பு அம்சத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை கொண்டிருக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில் 4ஜி, வைஃபை மற்றும் ப்ளூடூத் அணுகலை கொண்டிருக்கிறது. வரும் ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் சார்ஜிங் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

சர்வதேச சந்தையில் நவம்பர் 18 முதல் விற்பனை

சர்வதேச சந்தையில் நவம்பர் 18 முதல் விற்பனை

ஹானர் 50 லைட், ஹானர் 50 ஸ்மார்ட்போனானது இந்திய விலைப்படி சுமார் ரூ.26000 என்ற விலையில் இருக்கிறது. இது சர்வதேச சந்தையில் நவம்பர் 18 முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. குவால்காம் எஸ்ஓசி வசதியுடன் ஹானர் மேஜிக் 3 சீரிஸ் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஹானர் மேஜிக் 3 தொடர் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. ஹானர் மேஜிக் 3 தொடரில் மூன்று சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. ஹானர் நிறுவனத்தின் புதிய சாதனமான ஹானர் மேஜிக் 3 தொடரின் மூன்று மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை ஹானர் மேஜிக் 3, ஹானர் மேஜிக் 3 ப்ரோ மற்றும் ஹானர் மேஜிக் 3 ப்ரோ+ சாதனமாகும். இந்த சாதனங்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹானர் மேஜிக் 3 சீரிஸ் 5ஜி ஆதரவோடு வருகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

ஹானர் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.52,800 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை இந்திய மதிப்புப்படி ரூ.57,300 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரைட் பிளாக், டான் ப்ளூ, க்ளேஸ் ஒயிட் மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் வருகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு மாடல்

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு மாடல்

ஹானர் மேஜிக் 3 ப்ரோ சாதனத்தின் விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை இந்திய மதிப்புப்படி ரூ.68,800 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.72,300 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ.78,000 ஆக இருக்கிறது. இது பிரைட் வைட், க்ளேஸ் வைட் மற்றும் கோல்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஹானர் மேஜிக் 3 சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக் 3 சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக் 3 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாக கொண்ட மேஜிக் யுஐ 5.0 மூலம் இயக்கப்படுகிறது. இது 6.76 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் ஹூட்டின் கீழ் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இது இயக்கப்படுகிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. அது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 64 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் வருகிறது. முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டூயல் பேண்ட் வைஃபை, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் 4600 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Global Release of the Honor 50 Lite, Honor 50 smartphones has been confirmed: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X